எம்மைப் பற்றி (About US )

The Tamil National Race who Agitated for Freedom

நாம் இனஅழிப்புக்குள்ளான இப்போதும் இனஅழிப்புக்கு நித்தமும் உள்ளாகி வருகின்ற ஒரு தேசிய இனத்தின் ஆத்மாவின் குரல்.

எமது இனத்தின் தேசிய சுயநிர்ணஉரிமையை வலியுறுத்தியபடி எப்போதும் எமது குரல் உலகின் அத்தனை மனச்சாட்சி கதவுகளையும் தட்டியபடியே இருக்கும்.

தமிழ் இனத்தின் விடுதலைக்காக நடாத்தப்பட்ட அத்தனை தியாகவரலாறுகளையும் நாம் தலைமுறை தலைமுறையாக எடுத்து சொல்வதற்கு இந்த இணையம் எப்போதும் முயற்சிக்கும்.

ஏனென்றால் அந்த அர்ப்பணங்களின் மீது எழுந்து நிற்பதுதான் தமிழ்தேசிய ஆன்மா.

அதன் குரலாகவே இது ஒலிக்கும் எழுதும் . கருத்து மக்களை பற்றிக் கொண்டால் அது பெரும் சக்தியாக உருவாகும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் நாம்.

இந்த நம்பிக்கை கொண்ட அத்தனை பேருடனும். தமிழ்தேசியத்தின் விடுதலை தாயகசுதந்திரம் இவற்றில் ஆழமான புரிதல் கொண்ட அனைவருடனும் எமது கரங்களை இறுகப்பற்றி நடைபோட நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.

இதுவே நாம். மிக சுருக்கமான இந்த வரையறை எம்மை விரிவாக வெளிக்காட்ட முடியாததாக இருக்கும் என்பது எமக்கு நன்கு தெரியும்.

எமது இணையத்தில் வருகின்ற பதிவுகளை கொண்டு எம்மை யார் என்று நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

களத்தில் | தமிழீழம்