• :
  • :
களத்தில்

சீக்கியர்களின் பஞ்சாப் மாநில தனிநாட்டுக் கோரிக்கை வெற்றிபெற தமிழர்களின் வாழ்த்துக்கள்!

சீக்கியர்களின் பஞ்சாப் மாநில தனிநாட்டுக் கோரிக்கை வெற்றிபெற தமிழர்களின் வாழ்த்துக்கள்!

சீக்கியர்களின் பஞ்சாப் மாநில தனிநாட்டுக் கோரிக்கை வெற்றிபெற தமிழர்களின் வாழ்த்துக்கள்!

உலகில் உள்ள 150 இற்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சீக்கிய இனத்தவர்கள் நாளை ( 12/08/2018 ) பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் கூடி தமது தனிநாட்டுக்கோரிக்கைக்கான பிரகடனத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

உலகமெங்கும் பரந்து வாழும் 25 மில்லியனுக்கு மேற்பட்ட சீக்கிய சமூகத்தவர்களில் பலர் இந்த நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளனர். நீதிக்கான சீக்கியர்களின் அமைப்பு என்ற அமைப்பினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர்களான குர்பற்வன்ற் சிங், ஜதீந்தர் சிங் மற்றும் ஜோகா சிங் ஆகியோர் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.

சீக்கிய இனத்தின் மீது இந்திய மத்திய அரசு மிகப்பெரும் வன்முறைகளையும், நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாகவும், இந்திய மத்திய அரசின் இந்த நடவடிக்கையை முறியடித்து தமது இனத்தை காப்பாற்றுவதற்கு தனிநாட்டுக் கோரிக்கையை தவிர தமக்கு வேறு எந்த வழியும் இல்லை எனவும், இந்திய மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சீக்கிய இனத்தின் விடுதலைக்காக போராடும் தலைவர்கள் மீது இந்திய அரசு துன்புறுத்தல்களை மேற்கொள்வதாகவும், காஷ்மீரிலும் இது தொடர்வதாகவும் சீக்கியர்களின் அமைப்பின் சட்ட ஆலோசகர் குர்பற்வன்ற் சிங் தெரிவித்துள்ளார்.

சீக்கிய அமைப்பின் இந்த தனிநாட்டுக்கோரிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும், இந்த நடவடிக்கைக்கு பின்னுள்ள சட்டவியல் தொடர்பான காரணிகளை அவர்களுக்கு விளக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதுடன், நாளை இடம்பெறவுள்ள பிரகடனப்போராட்டத்தில் 155 நாடுகளின் வாழும் 25 மில்லியின் சீக்கிய மக்களில் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்திய மத்திய அரசின் இன அடக்குமுறைகளுக்கு உள்ளான சீக்கிய சமூகத்திற்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போராட்டத்தின் வெளிப்பாடாகவே இந்த பிரகடனம் அமைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் ஒன்றில் கூறப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரத்தின் அடிப்படையில் இந்த தனிநாட்டுக்கோரிக்கையை சீக்கிய தலைவர்கள் முன்னெடுத்துள்ளனர். அந்த அதிகாரத்தில் ஒரு இனம் தனது பொது மற்றும் அரசியல் உரிமைகளை பெறும் தகமையுடையதுடன், அது தனது அனைத்துலக அந்தஸ்த்து, பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார உரிமைகளையும் பாதுகாக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் இனவாத மற்றும் மதவாத கோரமுகத்தை உலகஅரங்கில் வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதுடன் உலகில் உள்ள மக்கள் அனைவரும் சிங்கிய மக்களுக்கு இந்திய மத்திய அரசினால் மேற்கொள்ளப்படும் கொடுமைகளை நேரில் கண்டு, எமது தனிநாட்டுக் கோரிக்கையில் உள்ள நீதியை புரிந்துகொள்ள வேண்டும் என இந்த அமைப்பின் மற்றுமொரு தலைவரான குரு சரன் சிங் தெரிவித்துள்ளார். அமைதியான முறையிலேயே தனிநாட்டுக்கேரிக்கைக்கான செயற்பாடுகளை நாம் முன்னெடுத்துள்ளோம், ஆயுதப்போராட்டத்தில் தற்போது நாம் அதிக கவனம் செலுத்தவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசத்தில் உள்ள எல்லா சிறுபான்மை மக்கள் மீதும் இந்திய மத்திய அரசு தனது இனவாத மற்றும் மதவாத அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றது. இது இந்திய சட்டத்திற்கு புறம்பானது. இந்த மதவாத அடக்குமுறைக்கு இந்திய மத்திய அரசு முழுமையான ஆதரவுகளை வழங்குகின்றது.

படுகொலைகளையும், கடத்தல்களையும் மானபங்கப்படுத்தல்களையும் இந்திய அரசு தனது மதவாத மற்றும் இனவாத குழுக்கன் மற்றும் ஆயுதப்படைகளின் மூலம் மேற்கொள்ளவாத இந்த அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளர். சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த பெண்களையும், சிறுவர்களையும் கூட இந்திய மத்திய அரசு படுகொலை செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நீர் மற்றும் மின்சார வளங்களை வேறு மாநிலங்களுக்கு திசைதிருப்பி இந்திய மத்திய அரசு தமது வளங்களை சூறையாடி வருவதாக நீதிக்கான சீக்கிய அமைப்பின் மற்றுமொரு தலைவர் ஜோகா சிங் தெரிவித்துள்ளார். இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்பதுடன் எமது மாநிலத்தின் விவசாய மற்றும் பொருளாதார வளங்களை இந்திய மத்திய அரசு திட்டமிட்டு நாசப்படுத்தி வருகின்றது. நாம் எமது மத மற்றும் கலாச்சார சுதந்திரத்தை இழந்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகின் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டுமே எமது மத சுதந்திரம் மறுக்கப்படுவதுடன், நாம் சுதந்திரமாக வாழவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது அங்கு வாழும் மக்களை தற்கொலைக்கு தூண்டி வருவதாகவும் ஜோக சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக பல இனங்கள் தமது சுதந்திரத்திற்காக போராடி வருகின்றன. கஷ்மீர், நாகலாந்து, மனிபூர் உட்பட பல மாநில மக்கள் தமது விடுதலைக்காக போரடி வருகின்றனர் என இந்த அமைப்பின் தலைவர்கள் பிரித்தானியா ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளனர்.

தமது இந்த போராட்டத்திற்கு பிரித்தானியா அரசும், ஏனைய நாடுகளும் பேராதரவினை வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே இந்தியாவின் இந்த இன அடக்குமுறை பல மாநிலங்களுக்கும் பரவி வருகிறது.

தூத்துக்குடியில் அதிகதூரவீச்சுக் கொண்ட சினைப்பர் துப்பாக்கிகளைக் கொண்டு அமைதியான வழியில் தமது அடிப்படை உரிமைக்காக போராடிய மக்களின் முன்னனித் தலைவர்களை இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் படுகொலை செய்துள்ளன. தமிழக மக்களின் கருத்துச் சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது, இந்திய காவல்துறை அரச இயந்திரத்தின் அடியாட்காளாக மாற்றம் பெற்றுள்ளது. இது தமிழக மக்களையும், தமிழ் இனத்தையும் ஒரு அழிவுக்கான பாதையில் தள்ளியுள்ளது.

கஷ்மீர் பகுதியில் இந்திய படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை வேண்டும் என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை தனது நடவடிக்கையை இந்தியாவின் ஏனை மாநிலங்களில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் மீதும் காண்பிக்க வேண்டும்.

சீக்கிய மக்களின் தனிநாட்டுக் கோரிக்கையை எதிர்க்கும் இந்திய அரசு இந்த பிரகடனத்தை நிறுத்துவதற்கான அழுத்தங்களை பிரித்தானியா அரசு மீது மேற்கொண்டபோதும் பிரித்தானியா அதற்கு உடன்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீக்கிய மக்களின் தனிநாட்டுக் கேரிக்கை வெற்றிபெற உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களும், தமிழக மக்களும் தங்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.