• :
  • :
களத்தில்

போஸ்டனில் எரிவாயு குழாய் விபத்து ஏராளமானோர் வெளியேற்றம்

போஸ்டனில் எரிவாயு குழாய் விபத்து ஏராளமானோர் வெளியேற்றம்

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால், 70 இடங்களில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 6 பேர் காயமடைந்துள்ளனர். எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எரிவாயு சப்ளை செய்யும் குழாயில் 70 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் தெருக்கள் புகைமூட்டத்துடன் காணப்படுகின்றன. அப்பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 70 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்டது எவ்வாறு என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாசாசுடெஸ் மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.