• :
  • :
களத்தில்

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி பலி எண்ணிக்கை 832 ஆக உயர்வு

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி பலி எண்ணிக்கை 832 ஆக உயர்வு

 இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

 
உலகில் நிலநடுக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கமும் சுனாமியும் அடிக்கடி நிகழ்கிறது. கடந்த ஜூலை மாதம் லம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 550-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
 
2004-ம் ஆண்டு சுமத்ரா தீவுக்கருகே ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் (ரிக்டரில் 9.1) இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடு களை சுனாமி தாக்கியது. இதனால் இந்தோனேசியாவைச் சேர்ந்த 1.68 லட்சம் பேர் உட்பட மொத்தம் 2.2 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் சுலவேசி தீவு அமைந்துள் ளது. சுற்றுலா தலமாக விளங்கும் இந்த தீவின் தலைநகரான பலுவில் சுமார் 3.8 லட்சம் பேர் வசிக்கின்ற னர். சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருவது வழக்கம். நேற்று முன்தினம் மாலையில் கடற்கரை திருவிழாவை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் கடற்கரைக்கு சென்ற வண் ணம் இருந்தனர்.
 
இந்நிலையில் மாலை 3 மணி அளவில் இந்த தீவின் கடல் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பலு நகரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில், 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 7.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
 
அதன் பிறகு மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும் பப் பெறப்பட்ட சிறிது நேரத்தில் பலு நகர கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கின. சுமார் 3 மீட்டர் உயரத்துக்கு ஆர்ப்பரித்து எழுந்த அலைகள் கரையை நோக்கி பாய்ந்து வந்து தாக்கின.
 
நிலநடுக்கம் காரணமாக பலு நகரில் இருந்த குடியிருப்பு கட்டிடங்கள், ஒரு மசூதி உட்பட பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. முக்கிய பாலம் ஒன்றும் இடிந்து விழுந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்த பலர் கட்டிடங்களை விட்டு வெளியில் ஓடிவந்தனர். எனினும், பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
 
 
சுனாமி தாக்கியதில் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன. கடற்கரையில் கூடியிருந்தவர்கள் மற்றும் வீடுகளில் இருந்த பலர் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட னர். அங்கிருந்த வாகனங்களும் இழுத்துச் செல்லப்பட்டன. இத னால் அப்பகுதி போர்க்களம் போல காட்சி அளிக்கிறது.
 
இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் ராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரையில் ஏராள மான உடல்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இதுவரை 832 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
 
இடிபாடுகள் மற்றும் சுனாமி யில் சிக்கி காயமடைந்த 1000-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனை களுக்கு வெளியே உள்ள திறந்த வெளியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலநடுக்கம் காரணமாக வீடுகளை இழந்தவர்கள் திறந்த வெளி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து பலு நகரில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
 
நிலநடுக்கம், சுனாமி காரண மாக மின் இணைப்பு, தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப் பட்டுள்ளது. சாலைகளும் மோச மாக சேதமடைந்துள்ளன. இத னால் மீட்புப் பணிகள் தாமதமாக நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.