ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31ஆம் திகதிவரை கால நீடிப்பு !

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31ஆம் திகதிவரை கால நீடிப்பு !

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31ஆம் திகதிவரை கால நீடிப்பு !

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31ஆம் திகதிவரை கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரெக்ஸிற் காலநீடிப்பு தொடர்பாக பிரசல்ஸில் நேற்று (புதன்கிழமை) ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூடி ஆராய்ந்தனர். இதன்போது ஒக்ரோபர் 31 வரை காலநீடிப்பை வழங்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக ஐரோப்பியக் கவுன்சிலின் தலைவர் டொனால்ட் ரஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து மணிநேர நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

பிரெக்ஸிற் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றில் பிரதமர் தெரேசா மே முன்வைத்த முன்மொழிவுகள் யாவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டதைப் போன்று கடந்த மார்ச் 29ஆம் திகதி பிரெக்ஸிற் இடம்பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து நாளைவரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிவரை காலநீடிப்பை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரதமர் மே கோரியிருந்தார்.

இந்நிலையில், இரு தரப்பையும் கவனத்திற்கொண்டு ஒக்ரோபர் 31ஆம் திகதிவரை கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர் மே, பிரெக்ஸிற் திட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றிக்கொள்ள முடியாமை தொடர்பாக வருந்துவதாக குறிப்பிட்டார். பிரெக்ஸிற் தொடர்பாக நாடாளுமன்றில் காணப்படும் தடைகளைத் தகர்ப்பது இலகுவானதல்லவென்றும் கூறினார். ஆனால், அரசியல்வாதிகள் என்ற வகையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல ஜனநாயக ரீதியான முடிவுகளை எடுப்பது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

அத்தோடு, தற்போதைய காலஅவகாசத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக, அதன் சகலஉரிமைகளையும் பெற்ற நாடாக பிரித்தானியா செயற்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.