img/728x90.jpg
img/728x90.jpg
பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டங்களுக்காக 20 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் ஒதுக்கப்படும் - பிரதமர் ஸ்கொட் மொரிசன்

பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டங்களுக்காக 20 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் ஒதுக்கப்படும் - பிரதமர் ஸ்கொட் மொரிசன்

அவுஸ்ரேலியாவில் பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டங்களுக்காக 20 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் ஒதுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார்.

நாட்டில் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என்ற தகவல் அறிந்ததும் கடும் அதிருப்தி அடைந்தார்.

பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்து ஸ்கொட் மொரிசன் கூறுகையில், ‘நாம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அவை மீண்டும் மறுசுழற்சி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.

ஆனால் அந்த நம்பிக்கை உடைக்கப்பட்டு, சீர்குலைந்துள்ளது. வெறும் 12 சதவீத பிளாஸ்டிக் பொருட்களே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

ஆண்டுக்கு ஒன்றரை மில்லியன் தொன்கள் பிரிகையடையாத கழிவுகள் நம் நாட்டில் இருந்து மறுசுழற்சிக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் நாம் உபயோகிக்கும் பொருட்களுக்கு நாம் தான் பொறுப்பு.

பிரிகையடையாத கழிவு மேலாண்மை திட்டங்களை நாமே செயல்படுத்த வேண்டும்’ என்றார்.