img/728x90.jpg
img/728x90.jpg
பேஸ்புக் பயனாளர்களில் 41 கோடி பேரின் தொலைபேசி இலக்கத்தை இணையத்தளத்தில் ஃபேஸ்புக் வெளியிட்டு சர்ச்சை

பேஸ்புக் பயனாளர்களில் 41 கோடி பேரின் தொலைபேசி இலக்கத்தை இணையத்தளத்தில் ஃபேஸ்புக் வெளியிட்டு சர்ச்சை

பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்தும் விவகாரத்தில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஷக்கர்பெர்க்கை சிறையில் அடைக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரொன் வைடன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘ பேஸ்புக்’கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

அதே சமயம் ‘ பேஸ்புக்’கில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக ‘ பேஸ்புக்’ நிறுவனம் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்தும் விவகாரத்தில் ‘ பேஸ்புக்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஷக்கர்பெர்க்கை சிறையில் அடைக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரொன் வைடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ” பேஸ்புக் பயனாளர்களின் பாதுகாப்பு குறித்து மார்க் ஷக்கர்பெர்க் அமெரிக்க மக்களிடம் மீண்டும் மீண்டும் பொய்யுரைத்து வருகிறார்.

அவர் ஏராளமான மக்களின் மனங்களை காயப்படுத்தி இருக்கிறார். இதற்கு அவர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்.

மேலும், இது தொடராமல் இருக்க வெறும் அபராதத்தோடு நிறுத்தாமல் மார்க் ஷக்கர்பெர்க்குக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதேவேளை உலகம் முழுவதும் உள்ள ஃபேஸ்புக் பயனாளர்களில் 41 கோடி பேரின் தொலைபேசி இலக்கத்தை இணையத்தளத்தில் பேஸ்புக் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.