img/728x90.jpg
img/728x90.jpg
பீய்ஜிங் டக்ஸிங் - சீனாவின் மிகப்பெரிய புதிய ‘ஸ்டார்ஃபிஷ்’ விமான நிலையம் திறப்பு!

பீய்ஜிங் டக்ஸிங் - சீனாவின் மிகப்பெரிய புதிய ‘ஸ்டார்ஃபிஷ்’ விமான நிலையம் திறப்பு!

சீனாவின் புதிய மற்றும் மிகப் பாரிய விமான நிலையம் அதன் கதவுகளை வாடிக்கையாளர்களுக்காக திறந்துள்ளது.

சுமார் 11 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த பிரம்மாண்ட கட்டிடம் சீனா மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 வது ஆண்டு நிறைவு விழாவின் போது இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Image result for China's largest new starfish airport opening

தலைநகர் பீய்ஜிங்கில் நட்சத்திர மீன் வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள டக்ஸிங் விமான நிலைய கட்டிடம் ஜனாதிபதி ஷி ஜின்பிங் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதாக சீனா டெய்லி என்ற தேசிய ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

குறித்த விமான நிலையம் சுமார் 7 லட்சம் சதுர மீட்டர்கள் அல்லது 98 காற்பந்தாட்ட மைதானங்களின் பரப்பளவைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for China's largest new starfish airport opening

அதேவேளை, பீய்ஜிங்கின் தற்போதைய விமான நிலையம், அமெரிக்க ஜோர்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக ஓய்வில்லா விமான போக்குவரத்தை கொண்ட மையமாக இருப்பதாக சர்வதேச விமான சேவை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பீய்ஜிங் முதன்மை விமான நிலையத்தின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில், புதிய டக்ஸிங் விமான நிலையம் செயற்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.

Related image

உலகளவில் நோக்குமிடத்து ஒரே கட்டிடத்தில் மிகப் பாரிய போக்குவரத்து வசதிகளைக் கொண்ட கேந்திர நிலையமாக டக்ஸிங் விமான நிலையம் விளங்குகின்றது.

இந்தநிலையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் சுமார் 170 மில்லியன் பயணிகளை வரவேற்க எதிர்பார்த்துள்ளதாக அதன் நிர்வாக அதிகாரிகள் தெரவிவித்துள்ளனர்.

Image result for China's largest new starfish airport opening

டக்ஸிங் விமான நிலையம் இன்று திறக்கப்பட்ட பின்னர் 7 உள்ளக விமான சேவைகள் அங்கிருந்து பயணத்தை ஆரம்பித்தன. அதில் முதலாவதாக A380 ரக விமானம் ஒன்று சீன நேரப்படி பிற்பகல் 4.23 அளவில் தென் சீனா நோக்கி புறப்பட்டுச் சென்றது.

அதேவேளை, பிரிட்டிஷ் ஏர்வேஸ், கேத்தே பசிபிக் மற்றும் ஃபின்னெயார் உள்ளிட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் ஏற்கனவே டக்ஸிங்கில் தமது தரையிறக்கத்துக்கான வழித்தடங்களை அறிவித்துள்ளன.

தியனன்மென் சதுக்கத்திற்கு தெற்கே 46 கி.மீ (29 மைல்) தொலைவில் அமைந்துள்ள புதிய விமான நிலையத்தை புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ஸஹா ஹதீத் (Zaha Hadid) வடிவமைத்துள்ளார்.

டக்ஸின் விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் பீய்ஜிங் மாநகரம், நியூயார்க் மற்றும் லண்டன் உள்ளிட்ட மாநகரங்களின் குழுவில் இணைந்துள்ளது. அவை இரண்டும் நீண்ட தூர மற்றும் பிரம்மாண்ட சர்வதேச விமான நிலையங்களைக் கொண்டுள்ளன.

ஏற்கனவே, 1958 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பீய்ஜிங் தலைநகர விமான நிலையத்தை சுமார் 100 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Youtube