img/728x90.jpg
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்தை நெருங்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்தை நெருங்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை நெருங்குகின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் ஒரு இலட்சத்து 99ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 பாதிப்பு மற்றும் உயிரிழப்பை அதிகம் எதிர்கொண்ட நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை 67இலட்சத்து 49ஆயிரத்து 289பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 38ஆயிரத்து 072பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 480பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை 25இலட்சத்து 22ஆயிரத்து 463பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 14ஆயிரத்து 014பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை 40இலட்சத்து 27ஆயிரத்து 826பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.