img/728x90.jpg
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது!

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில், ஒரு இலட்சத்து எட்டாயிரத்து 389பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆயிரத்து 201பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல்நாடாக விளங்கும் அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக 98இலட்சத்து ஆயிரத்து 355பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு இலட்சத்து 39ஆயிரத்து 829பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 32இலட்சத்து 69ஆயிரத்து 507பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 18ஆயிரத்து 045பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை 62இலட்சத்து 92ஆயிரத்து 019பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.