img/728x90.jpg
அமெரிக்காவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் பாதிப்பு - உயிரிழப்பு அதிகப்பட்ச அளவை தொட்டது!

அமெரிக்காவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் பாதிப்பு - உயிரிழப்பு அதிகப்பட்ச அளவை தொட்டது!

அமெரிக்காவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு அதிகப்பட்ச அளவை தொட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 74ஆயிரத்து 190பேர் பாதிக்கப்பட்டதோடு நான்காயிரத்து 134பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்று பரவியதிலிருந்து அமெரிக்காவில் பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை இரண்டு கோடியே 21இலட்சத்து 32ஆயிரத்து 045பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 74ஆயிரத்து 190பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 86இலட்சத்து 14ஆயிரத்து 604பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 29ஆயிரத்து 034பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுதவிர ஒரு கோடியே 31இலட்சத்து 43ஆயிரத்து 317பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.