லெப் கேணல் யோகா- லெப் கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்

லெப் கேணல் யோகா- லெப் கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்

லெப். கேணல் யோகா, லெப். கேணல் பவா வீரவணக்க நாள் இன்றாகும்.

20.08.2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் துணையுடன் தேசவிரோதிகள் (கருணா குழு) மேற்கொண்ட “கிளைமோர்” தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘மட்டு – அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர்’ லெப். கேணல் பாவா / தயாசீலன் ( செல்வராசா ஜெகதீஸ்வரன்  ), ‘மட்டு – அம்பாறை மாவட்ட தொண்டு நிறுவனங்களிற்கான இணைப்பாளர்’ லெப். கேணல் யோகா ( நாகலிங்கம் ஜீவராசா )ஆகிய மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
|| விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்…….
 
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”