சர்வதேச கடற்பரப்பில் 2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட போராளிகள்

சர்வதேச கடற்பரப்பில் 2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட போராளிகள்

சர்வதேச கடற்பரப்பில் 2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட போராளிகள்

10.09.2007 அன்று மாலை சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் "எம்.ரி. மன்யோசி" (M.T. Manyoshi) எண்ணெய்க் கப்பல் மற்றும் "எம்.வி. செய்ஸின்" (M.V. Seishin), "எம்.வி. கொசியா" (M.V. Koshia) ஆகிய வணிகக் கப்பல்களை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்த வேளையில் 11.09.2007 அதிகாலை வரை ஏற்பட்ட மோதலில் தமது கப்பல்களை எரித்தும் - மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி லெப். கேணல் வேங்கை, கடற்புலி லெப். கேணல் திருவருள், கடற்புலி லெப். கேணல் எரிமலை / கபிலன், கடற்புலி லெப். கேணல் செண்பகச்செல்வன், கடற்புலி லெப். கேணல் எழில்வேந்தன், கடற்புலி லெப். கேணல் முல்லைமாரன் / சோபிதன், கடற்புலி லெப். கேணல் ஐது / வீமன், கடற்புலி லெப். கேணல் சிறீகாந்த், மருத்துவர் லெப். கேணல் கஜேந்திரன் / தமிழ்மாறன், கடற்கரும்புலி நிதர்சன், கடற்புலி கர்ணன், கடற்புலி பிரியன், கடற்புலி கலைச்செல்வன், கடற்புலி தமிழ்நம்பி, கடற்புலி புலிக்குட்டி, கடற்புலி ஜெயா, கடற்புலி குன்றன், கடற்புலி கீதன், கடற்புலி தென்னவன், நாட்டுப்பற்றாளர் தங்கன் / தங்கம் (இவர் லெப். கேணல் அன்புக்குமாரனின் சகோதரர்) உட்பட ஏனைய மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 

தாயக மக்களுக்குரிய அத்தியாவசிய வளங்கள் ஏற்றிப் பயணித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் வணிகக் கப்பல் பகைவனின் முற்றுகைக்குள் உள்ளான வேளை பகைவனிடம் சரணாகதி அடையாமல் தமிழீழத்தின் விடயங்களைப் பாதுகாத்து கப்பலுடன் தங்களைத் தாங்களே எரிவாயுக் கலன் கொண்டு எரித்து கப்பலை வெடிக்கவைத்து கடலன்னை மடியில் ஆழம் காண முடியாத அளவுக்கு சென்றவர்கள் எம் ஆழக்கடலோடிகள்.

உலகெங்கும் கடலோடி - ஈழ நிலமொன்றே நினைவாகி விழிமூடிய உங்கள் நினைவுகளோடு........

"கடலிலே காவியம் படைப்போம்"

தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”