மூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள்

மூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள்

மூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

இந்திய அமைதிப் படையின் நயவஞ்சகத் தனத்தால் தமிழீழக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு எமது வரலாற்று எதிரியான சிறிலங்கா இராணுவத்திடம் ஒப்படைக்க முற்பட்ட வேளை எதிரியிடம் உரியோடு பிடிபடுதல் கூடாது என்ற இயக்க மரபிற்கிணங்க சயனைட் உட்கொண்டு 05.10.1987 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி’ லெப். கேணல் குமரப்பா, ‘திருமலை மாவட்ட சிறப்புத் தளபதி’ லெப். கேணல் புலேந்திரன், மேஜர் அப்துல்லா, கப்டன் நளன், கப்டன் மிரேஸ், கப்டன் பழனி, கப்டன் கரன், கப்டன் ரகு, லெப்டின்னட் அன்பழகன், லெப்டின்னட் தவக்குமார், 2ம் லெப்டின்னட் ஆனந்தகுமார், 2ம் லெப்டின்னட் ரெஜினோல்ட் ஆகிய வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

|| தீருவில் வெளியில் தீயில் சங்கமித்து தமிழர் மனங்களில் நின்றிந்த தியாக தீபங்கள்……