• :
  • :
களத்தில்

கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிறோயன் உள்ளிட்ட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிறோயன் உள்ளிட்ட  ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

 07.10.1999 அன்று மன்னார் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினருடனான கடற்சமரில் வீரச்சாவடைந்த கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிறோயன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவுக்குப் பதிலடியாக ஒரு தாக்குதலும், அதேவேளை திருகோணமலைக்கான விநியோக நடவடிக்கையும் தலைவரால் கடற்புலிகளிடம் கொடுக்கப்படுகிறது.

 
அதற்கமைவாக 14.10.1999 அன்று அப்போதைய கடற்த் தாக்குதல் தளபதியான லெப். கேணல் இரும்பொறை மாஸ்ர் தலைமையிலான அனைத்துத் தொகுதிகளையும் உள்ளடக்கிய கடற் சண்டைப் படகுகளும் லெப். கேணல் மங்களேஸ் தலைமையிலான விநியோகப் படகுகளும் ஒழுங்கமைக்கப்படுகிறது. திட்டத்தின்படி விநியோக நடவடிக்கை முடிவுற்றதும் எமது வலிந்த தாக்குதல் நடாத்த திட்டமிடப்பட்டது.
 
ஆனால், நாம் வநியோகப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எமது விநியோகப் படகுகள் மீது சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொள்ள முயன்ற வேளை கடற்சண்டை ஆரம்பமானது இச்சமரில் லெப். கேணல் இரும்பொறை மாஸ்ரதும், லெப் கேணல் பழனியினதும் தாக்குதலால் ஒரு டோறாப் படகு நகரமுடியாமல் நிற்க; அவ்வேளையில் பழனி கூட்டி வநத கரும்புலிப் படகை அடிவேண்டி நகரமுடியாமல் நின்ற டோறாப் படகிற்கு பாகையைச் சொல்லி அனுப்பி கட்டளை வழங்கிக் கொண்டிருக்கையில் இருடோறா பழனியின் படகுமீது பக்கவாட்டாக தாகக்குதல் நடாத்த பழனி அவ் டோறாக்கள் மீது தாக்குதல் தொடுத்தான். அதே நேரம் டோறா மீது தாக்குதல் நடாத்தச் சென்ற கரும்புலிப் படகு காலநிலை சீரின்மையால் டோறாவை கண்டுபிடிக்க முடியாதலால் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் லெப். கேணல் இரும்பொறை மாஸ்ருடன் நின்ற கரும்புலிப் படகுடன் மோதி விபத்துக்குள்ளானது.
 
இந்நடவடிக்கையில் ஆறு கடற்கரும்புலிகள் உட்பட ஏழு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
 
"கடலிலே காவியம் படைப்போம்"
 
என்றும் அலையரசி.