• :
  • :
களத்தில்

தமிழினப் படுகொலை நாள்- 2018 சிறப்பு வெளியீடு!

தமிழினப் படுகொலை நாள்- 2018 சிறப்பு வெளியீடு!

தமிழினப் படுகொலை நாள்- 2018 சிறப்பு வெளியீடு

 
எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க நாள் மே 18. எம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் உச்சமாக , 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலங்கள் நிகழ்த்தப்பட்டது.
 
நீதிக்கான குரல் எழுப்பிய மக்களை, நீதிக்காய் குரல் எழுப்பினார்கள் அதனோடு இணைந்து நடந்தார்கள் என்பதற்காகவே சர்வதேச யுத்தவிதிகளை புறந்தள்ளி , மனிதத்துவ நடைமுறைகளையெல்லாம் தூக்கியெறிந்து , பாலியல் பலாத்காரங்களை, உயிர்வாழ்வதற்கான உணவை ,மருந்தை கூட ஆயுதமாக்கி, சாட்சியங்கள் முடியுமானவரை அகற்றி , பூகோள அரசியல் போட்டியின் பகடைக்காய்களாக்கப்பட்டு ,சர்வதேசம் கண்மூடி இருக்க , வஞ்சிக்கப்பட்டு எமது மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.
 
எதுவுமறியாத பாலகர்கள் , முதியவர்கள் அங்கவீனர்கள் என எந்த வேறுபாடுகளும் இன்றி, தமிழர்கள் என்பதற்காகவே ஆயிரம் ஆயிரமாய் எமது மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள். அந்த அவலங்களின் உச்சக்கட்டங்கள் நிகழ்ந்தேறிய நாள்தான் மே 18 அதன் வலிகளை சுமந்து 18 .05 .2018 அன்று வெளிவருகிறது வலிகளின் மொழி இறுவெட்டு.