img/728x90.jpg
மாகாண சபைக்கு முள்ளிவாய்க்கால் நிகழ்வு நடத்த அருகதை கிடையாது! - செல்வராஜா கஜேந்திரன்

மாகாண சபைக்கு முள்ளிவாய்க்கால் நிகழ்வு நடத்த அருகதை கிடையாது! - செல்வராஜா கஜேந்திரன்

மாகாண சபைக்கு முள்ளிவாய்க்கால் நிகழ்வு நடத்த அருகதை கிடையாது! - செல்வராஜா கஜேந்திரன்

 
முள்ளிவாய்க்கால் மே 18 நாளினை நாங்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
 
பல்கலைக்கழக மாணவர்கள் பொது அமைப்புக்கள் இணைந்து அந்த நிகழ்வினை ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு அனைத்து தரப்புக்களும் ஒத்துளைப்பு தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.
 
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஏன் நடைபெற்றது என்பதை நாங்கள் ஒருகணம் சிந்தித்து பார்க்கவேண்டியுள்ளது.
 
தமிழ்மக்கள் ஜனநாயாக போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறியது தமிழர்களின் உரிமை போராட்டத்தை அற்று செய்வதற்காக நடைமுறைக்கு வருவதுதான் 13 ஆவது திருத்தச்சட்டத்திலான மாகாணா சபையாகும் அதனை அன்று வலுக்கட்டாயமாக திணிக்க முற்பட்டபோதுதான் தமிழீழவிடுதலைப்புலிகளுக்கும் இந்திய அரசிற்கும் இடையில் போர் மூண்டது அந்த போர் 2009 வரை நீடித்தது தமிழர்கள் தங்களுக்கான சுயநிர்ணய அடிப்படையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தியே முள்ளிவாய்க்கால் வரை வந்தார்கள். மாகாண சபையினை ஏற்க மறுத்துத்தான் இவ்வளவு உயிர்தியாகங்களும் நடைபெற்றது.
 
இந்த தியாகங்களை நினைவுகூரும் பொழுது இரண்டு விடயங்களை கவனிக்கவேண்டும் இந்த மக்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளார்கள் என்றால் மக்கள் மீது இனப்படுகொலையினை நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றினால் தண்டிக்கப்படவேண்டும் மற்றது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் இலட்சியம் அடையப்படவேண்டும் அவர்களுடைய தியாகங்கள் கொச்சைப்படுத்தப்படகூடாது என்பது எங்களின் உறுதியான நிலைப்பாடு இந்த படுகொலைக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் 7 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகின்ற நிலையில் அந்த முயற்சிக்கு குந்தகமாக இருப்பவர்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் காலடிவைப்பதற்கு தகுதியற்றவர்கள்.
 
மாகாண சபை இந்த நினைவேந்தல் நிகழ்வை தகுதிஏற்று நடத்துவதற்கு இணைந்து நடத்துவதற்கு அருகதை கிடையாது அந்தவகையில்தான் கடந்த காலங்களில் தனித்து இந்த நிகழ்வினை தனித்துநிகழ்வினை நடாத்தி வந்துள்ளோம் இம்முறை பல்கலை மாணவர்களை பொது அமைப்புக்களை இணைத்து ஒரு இடத்தில் ஒற்றுமையாக நினைவு கூருவதற்கு முயற்சி எடுத்துள்ளார்கள்.
 
அவர்களின் முயற்சிக்கு முழுமையான ஒத்துளைப்பு நிபந்தனைகிளின் அடிப்படையில் வழங்குகின்றோம்
 
வடமாகாண சபை தலைமைஏற்று நடத்துவதற்கு அந்தரப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் இது ஏற்றுக்கொள்ளமுடியாது மாகாண சபை என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்ளமுடியாது மாறாக மாணவர்கள் ஏற்படுசெய்கின்ற நிகழ்வில் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் கௌரவப்படுத்தப்பட்டு முன்னிலை அளிப்பது என்பதில் எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை நாங்கள் இதில் மறுதலிக்கின்ற விடயம் மாகாணசபைக்கு அங்கிகாரம் கொடுக்ககூடாது என்பதுதான் பல்கலைக்கழக சமூகம் சிவில் அமைப்புக்கள் நடத்துகின்ற நிகழ்விற்கு நாங்கள் இதில் முழுமையான ஒத்துளைப்பினை வழங்கு வதற்கு தயாரா இருக்கின்றோம்.
 
இன்னிலையில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார் தங்களுடைய முழுமையானகட்டுப்பாட்டிற்குள் இருக்கின்ற வடக்கு மாகாணசபை ஏற்பாடு செய்கின்ற நிகழ்விற்கு தமிழ்மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுள்ளார் அந்த மாகாணசபை ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு வேறெங்கிலும் நடைபெறபோகிறதோ தெரியவில்லை அப்படிப்பட்ட நிகழ்வில் நாங்கள் ஒருபொழுதும் கலந்துகொள்ளபோவதில்லை என்பதனை தெளிவாக தெரிவித்துக்கொள்கின்றோன்.
 
எதிர்கட்சி தலைவர் போரினை முடிவிற்கு கொண்டுவந்த மகிந்தவிற்கு பாராட்டுதெரிவித்தவர் விடுதலைப்புலிகளை ஈவிரக்கமில்லாத பயங்கரவாதிகள் என்று தொடர்ச்சியாக பாராளமன்றில் தெரிவித்து வந்தவர் ஜக்கியநாடுகள் சபையில் சர்வதேசவிசாரணை வேண்டாம் உள்ளக விசாரணைக்கு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று வலியுறுத்தி வருகின்றவர்கள் விசாரணைகள் ஏதும் நடைபெறாதபோதே காலஅவகாசத்தை வழங்கி போர்க்குற்றத்தில் இருந்து இனப்படுகொலையாளிககளை பாதுகாத்துக்கொண்டிருப்பவர் அவரும் அவருடைய சகாவான சுமந்திரன்,மாவை போன்றவர்களும் இந்த இனஅழிப்பு உடந்தையாக இருந்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டி பல்கலை காழக மாணவர்கள் தனித்துவமான முறையில் மக்களுக்கு நீதியினை பெற்றுக்கொடுக்க அவர்களின் தலைமையில் முன்னெடுக்கம் நிகழ்வுகளுக்கு மாகாணசபையின் தலைமையில் நடைபெறும் நிகழ்வாக இது அமையகூடாது என்பதை வலியுறுத்துகின்றேன்

Youtube

https://www.youtube.com/embed/6D5a4WmXBhY