img/728x90.jpg
பிரித்தானிய பிரதமர் வாசல்தலம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் 9 ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் 2018

பிரித்தானிய பிரதமர் வாசல்தலம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் 9 ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் 2018

பிரித்தானிய பிரதமர் வாசல்தலம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் 9 ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் 2018


உலகத்தமிழ் மனங்களை அழுத்தி நிற்கும் நீங்க துயர் நிறைந்த முள்ளிவாய்க்கால் 9 ம்  ஆண்டு நினைவெழுச்சி நாள்.  இன்று புலம்பெயர்மண்ணிலும் பிரித்தானிய பிரதமர் வாசல்தலம் முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது . நூற்றுக்கணக்கான எம் தமிழ் உறவுகள் அவர் தம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்க்காக ஒன்றிணைந்து இருந்தார்கள் .

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்த உறவுகளுக்கான ஈகைசுடரினை திருமதி சிவகுமார் அனுஷா ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர் திரு ரவிசங்கர் பிரித்தானிய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார் .

தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர் திரு செல்வகுமரன் ஏற்றி வைத்தார் .

தொடர்ந்து கல்லறைக்கான மலர்மாலை வணக்கத்தோடு பொதுமக்கள் சுடர் வணக்கத்தினையும் செலுத்தினார்கள் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி உரையினை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் வெள்ளை புலி என்று அழைக்கப்படும் கௌரவ சேர் எட் டேவி மற்றும் கிங்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியருமான அண்டி ஹிக்கினின்போட்டோன் ஆகியோர்  ஆற்றினார்.

வலிகளின் மொழி என்கிற இறுவெட்டு வெளியீட்டோடு தமிழீழமே எமது நோக்கம் என்ற உறுதி மொழியோடு தேசிய கொடிகள் கையேந்தலுடன் நிகழ்வானது நிறைவு பெற்றது.