• :
  • :
களத்தில்

மட்டக்களப்பில் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
 
தமிழ் தேசிய விடுதலைக்காக முதற் தற்கொடையாளர் பொன். சிவகுமாரின் 44 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை மாலையில் ( 05/06/2018 ) மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.
 
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு பொன் சவகுமாரரின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மலை அணிவித்து உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
 
நினைவேந்தல் நிகழ்வின்போது பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் உள்ள கல்விகற்கும் இரண்டு மாணவர்களுக்கு இரண்டு வருடகற்கைக்கான நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.
 
அத்துடன் மண்முனைப்பற்றிலமைந்துள்ள கிரான்குள விஷ்ணு வித்தியாலயத்தில் உள்ள 32 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.