• :
  • :
களத்தில்

சுயநிர்ணயம் அங்கீகரிப்பட வேண்டுமாயிருந்தால் அதற்குரிய மிகப்பெரும் ஆயுதம் கல்வி ! - தர்மலிங்கம் சுரேஸ்

சுயநிர்ணயம் அங்கீகரிப்பட வேண்டுமாயிருந்தால் அதற்குரிய மிகப்பெரும் ஆயுதம் கல்வி ! - தர்மலிங்கம் சுரேஸ்

சுயநிர்ணயம் அங்கீகரிப்பட வேண்டுமாயிருந்தால் அதற்குரிய மிகப்பெரும் ஆயுதம் கல்வி ! - தர்மலிங்கம் சுரேஸ்

 
இலங்கைத் தீவில் கல்வியில் காட்டிய பாரபட்சமே தமிழ் மக்களை போராடத் தூண்டியது அதற்கொதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆனால் இன்னும் விடுதலை பெறப்படவில்லை. இந்த நிலையில் சுயநிர்ணயம் அங்கீகரிப்பட வேண்டுமாயிருந்தால் தமிழர்கள் புத்தியால் மாத்திரமே போராடவேண்டும் அதற்குரிய மிகப்பெரும் ஆயுதமாக கல்வியைத் தவிர தமிழர்களிடம் வேறொன்றுமில்லை எனவே மாணவாகள்; சிந்தித்து செயற்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் மட்டக்களப்பு அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கரடியனாறு மகாவித்தியாலயம், கித்துள் மகா வித்தியாலயம், மகிழவெட்டுவான் மகாவித்தியாலயம், ஆகிய பாடசாலைகளில் இந்த வருடம் க.போ.தர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கல்வி கருத்தரங்கு கிழக்கு பல்கலைக்கழக கலை.கலாச்சார பீட மாணவர் ஒன்றியம் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் கல்விப் பிரிவும் இணைந்து கடந்த சனி ,ஞாயிற்றுக்கிழமை கரடியனாறு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது இதனை ஆரம்பித்துவைத் உரையற்றிய தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் மட்டு அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இவ்வாறு தெரிவித்தார்.
 
இன்று தமிழ்மக்கள் மற்றைய இரு மூகங்களுடன் ஒப்பிடும்போது கல்வி பொருளாதாம் உட்பட்ட அனைத்து விடயங்களிலும் 30 வடங்களுக்குப் பின்னாலே தமிழர்கள் நிற்கின்றார்கள். ஒருகாலத்தில் கல்வியில் மிகச் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றவர்கள் தமிழர்களே இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பேரினவாதம் கல்வியில் காட்டிய பாரபட்சத்திற்கு எதிராக குரல் கொடுத்ததையடுத்து எம்மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டதன் காரணமாக தமிழ் மக்களை போராடத் தூண்டியது.
 
அதற்கொதிராக போராடிக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இன்னும் விடுதலை பெறப்படவில்லை எனவே நாமும் எது அடுத்த தலைமுறையும் இந்த இலைங்கைத் தீவிலே நிலைத்திருக்க வேண்டுமானால் எமது சுயநிர்ணயம் அங்கீகரிப்படவேண்டும்.
 
அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மையுடன் கூடிய சுயநிர்ணயம் அங்கீகரிப்பட வேண்டுமாயிருந்தால் இனிமேல் தமிழர்கள் புத்தியால் மாத்திரமே போராடவேண்டும் அதற்குரிய மிகப்பெரும் ஆயுதமாக கல்வியைத்தவிர தமிழர்களிடம் வேறொன்றுமில்லை எனவே மாணவர்களாகிய உங்களுக்கு மிகப்பெரும் பெறுப்பு உள்ளது நீங்கள் அனைவரும் பல்கலைக்கழகம் செல்லக்கூடிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
 
கணித, விஞ்ஞானத்துறைகளில் எமது சமூகம் காட்டும் ஆர்வத்தைப்போல கலைத்துறையிலும் காட்ட வேண்டும் குறிப்பாக கிழக்கைப் பொறுத்தமட்டில் எமது இனத்தைச் சார்ந்த சட்டத்தரணிகளின் எண்ணிக்கை மிககுறைவு எமது மக்களின் நிலம். இனம் சார்ந்த பிரச்சனைகளை சட்டரீதியாக அனுகின்றபோது எமது இனத்தைச் சார்ந்த சட்டத்தரணிகளே பொருத்தமானவர்கள்.
 
எனவே மாணவர்கள் கூடுதலாக சட்டத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்த சிறந்த சட்டவாளர்களாகவும் ஆழுமையுள்ளவர்களாகவும் சிறந்த தலைவர்களாகவும் எதிர்காலத்தில் மிளிரவேண்டும்.
 
இன்றைய சூழ்நிலையில் கிழக்கிலுள்ள அனைத்து உயர்திணைக்களங்களிலும் சகோதர முஸ்லீம்களே உள்ளனர் அது தவறில்லை அவர்களின் சமூகத்தை சிறந்த முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதில் சகோதர முஸ்லீம் தலைவர்கள் முனைப்புடன் செயற்படுகின்றனர். அதுபோன்று எங்களின் தலைவர்கள் இதுவரை செயற்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும் உயர் பதவியில் இருக்கும் எமது இனத்தைச் சார்ந்தேர்கள் சிலர் அதிகார துஸ்பிரயோகம் செய்கின்றனர் இப்படிப்பட் நிலமையை நீங்கள் எதிர்காலத்தில் தகர்தெறிய வேண்டும் என்றார்.