img/728x90.jpg
யாழ்ப்பாணக் குடாநாடு சிங்கள ஆக்கிரமிப்பில் 93 கடற்படை 54 இராணுவ முகாம்கள் மற்றும் 01 விமானப்படை முகாம் !

யாழ்ப்பாணக் குடாநாடு சிங்கள ஆக்கிரமிப்பில் 93 கடற்படை 54 இராணுவ முகாம்கள் மற்றும் 01 விமானப்படை முகாம் !

யாழ்ப்பாணக் குடாநாடு சிங்கள ஆக்கிரமிப்பில் 93 கடற்படை 54 இராணுவ முகாம்கள் மற்றும் 01 விமானப்படை முகாம் !

 
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறீலங்காவின் 93 கடற்படை முகாம்களும் 54 இராணுவ முகாம்கள் , ஒரு விமானப்படை தளம் என்பன உள்ளன. 18 காவல் நிலையம் உட்பட 30 காவல் அலுவலகம் இயங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
 
சுமார் 5 லட்சம் மக்கள் வாழும் குடாநாட்டில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீன்பிடியை நம்பியே வாழும் நிலையில் சிறீலங்கா கடற்படையினரே அதிக இடங்களை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ளமையினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகவே உள்ளது.
 
குடாநாட்டைச் சூழ 93 முகாம்களில் குடியிருக்கும் சிறீலங்கா கடற்படையினர் தீவகத்தைச் சூழ்ந்த பிரதேசத்தில் மட்டும் 61 முகாம்களில் நிலைகொண்டுள்ளனர், குடாநாட்டின் ஏனைய பகுதிக் கரையோரத்தில் 32 இடங்களில் நிலைகொண்டுள்ளனர். இவ்வாறு நிலைகொண்டுள்ள சிறீலங்கா கடற்படையினர் மக்களிற்குச் சொந்தமான 269 ஏக்கர் நிலத்தினையும் அரச காணிகளில் 260 ஏக்கரையும் ஆக்கிரமித்தே நிலைகொண்டுள்ளனர்.
 
இதேநேரம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் சிவில் நிர்வாகச் செயல்பாட்டிற்காக செயல்படும் காவல்துறையும் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதில் குறைவில்லாமலே செயலாற்றுகின்றனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள 18 காவல் நிலையங்கள் மற்றும் காவல’ அத்தியட்சகர்கள் அலுவலகம் , விடுதிகள் என மொத்தமாக 30 இடங்களில் மக்களின் நிலத்தைக் ஆக்கிரமித்தே தங்கியுள்ளனர். இவை சுமார் 200 குடும்பங்களிற்குச் சொந்தமான நிலங்கள்.
 
சிறீலங்கா காவல்துறையினர் ஆக்கிரமித்திருக்கும் நிலங்களை விடுவிக்குமாறு உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கும் நிலையிலும், பல இடங்களை நிரந்தரமாக சுவீகரிக்கும் செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக நீதிமன்றை நாட உரிமையாளர்களும் தயாராகின்றனர். இதில் நெல்லியடியில் தற்போது தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் வீட்டை ஒப்படைக்குமாறு கோர பதில்காணியை காவல்துறையினர் கோரியதற்கிணங்க மாவட்டச் செயலகம் ஓர் நிலத்தை வழங்கியிருந்தது.
 
குறித்த நிலம் நகரில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ளது . அதனால் நகரை அண்டிய பகுதியில் வேறு காணியை வழங்குமாறு சிறீலங்கா காவல்துறையனர தற்போது கோருகின்றனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கும் 18 காவல் நிலையங்களில் 14 காவல் நிலையங்கள் தனியார் காணியை ஆங்கிரமித்து இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.