img/728x90.jpg
மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டிய பல ஊடகங்கள்

மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டிய பல ஊடகங்கள்

 மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டிய பல ஊடகங்கள்- சமூக வலைத்தளங்கள், ஒடுக்குமுறையாளர்களின் தரகர்களாக மாறிவரும் துயரச்சூழலில்,

 
http://www.kalaththil.com
http://www.kalaththil.net
 
ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்குரலாக, அரசியல் களமாக,
 
'களத்தில்' என்கிற இணையவழி ஊடகம் வெளிவருவது குறித்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
நாமெல்லோரும் எம் தேச விடுதலை நோக்கிய பாதையில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அதேவேளை, பிராந்திய-பூகோள அரசியல் நகர்வுகள் குறித்த தெளிவூட்டலை , அரசியல் விவாதங்களை தாங்கிவரும் கனதியான களமாக, 'களத்தில்' இருக்குமென்கிற நம்பிக்கை எனக்குண்டு.
 
மக்களை, கருத்தியல் தளத்தில் அரசியல்மயப்படுத்தும் சீரிய பணியை, ' களத்தில்' முன்னெடுக்க வேண்டும்.
 
வல்லான் சொல்வதே ' வேதவாக்கு' என்கிற இழிநிலை மாற வேண்டும்.
 
தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை முழக்கத்தினை விட்டுக்கொடாமல், இறுதிவரை தீரத்துடன் போராடி மரணித்த அனைத்து மாவீரர்களின் ஈகங்களை நெஞ்சில் இருத்தி, 
இந்த ' களத்தில்' இணையம் பயணிக்க வேண்டும்.
' பாதையைத் தேடாதே...
 
உருவாக்கு.'
- இதயச்சந்திரன் 
(அரசியல் விமர்சகர்)