img/728x90.jpg
மட்டக்களப்பு கச்சேரியில் 54 இலட்சம் ரூபா‌ய் ஊழல்- சிக்கினார் கணக்காளர் எம் எஸ் பசீர்?

மட்டக்களப்பு கச்சேரியில் 54 இலட்சம் ரூபா‌ய் ஊழல்- சிக்கினார் கணக்காளர் எம் எஸ் பசீர்?

மட்டக்களப்பு கச்சேரியில் 54 இலட்சம் ரூபா‌ய் ஊழல்; சிக்கினார் கணக்காளர் எம்.எஸ்.பசீர்?

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கி கணக்கில் இருந்து சுமார் 54 இலட்சம் ரூபாய் களவாடப்பட்டுள்ளமை இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பு சமுர்த்தி திணைக்கள கணக்காளராக கடந்த 20 வருடங்களாக பணியாற்றிவரும் பஷீர் அவர்களின் கையெழுத்திடப்பட்ட காசோலை மூலமாகவே இந்த பணம் களவாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
கோப்பாவெளிப்பகுதி பொதுமக்கள் 9 பெயரின் பெயரில் காசோலை வரைந்து குறித்த பணம் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
 
இது குறித்த விசாரணைகளை மட்டக்களப்பு பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
 
மட்டக்களப்பு சமுர்த்தி திணைக்கள கணக்காளராக கடந்த 20 வருடங்களாக பணியாற்றிவரும் பஷீர் அவர்கள் நேற்றைய தினம் அரசியல் தலையீட்டின் மூலம், உள்ளக் கணக்காளர் பதவிக்கான நியமனத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
19வது திருத்தத்தின்படி, அரச நியமனங்களை பொதுச்சேவை ஆணைக்குழுவே வழங்க உரித்துடையது.
 
ஆனால், இலங்கை அரசியலமைப்பை மீறி,பொதுச்சேவை ஆணைக்குழு வழங்கிய நியமனத்தை மீறி, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு பஷீருக்கான நியமன கடிதத்தை வழங்கியுள்ள நிலையில் இவர் குறித்த ஊழல் தற்போது வெளியாகியுள்ளது.
 
அமைச்சர் அலிசாகிர் மௌலானாவின் ஏற்பாட்டில், இவருக்கான நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்.
 
இவர் குறித்த ஊழல்கள் மறைக்கப்பட்டு இவருக்கு பதிலாக சாதாரண அப்பாவி உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.