img/728x90.jpg
கிளிநொச்சியில் சிறீலங்கா இரணுவவாகனம் மோதி தமிழர் ஒருவர் ஸ்தலத்தில் பலி!

கிளிநொச்சியில் சிறீலங்கா இரணுவவாகனம் மோதி தமிழர் ஒருவர் ஸ்தலத்தில் பலி!

கிளிநொச்சியில் சிறீலங்கா இரணுவவாகனம் மோதி தமிழர் ஒருவர் ஸ்தலத்தில் பலி!
 
கிளிநொச்சியில் இருந்து இரணைமடு நோக்கி இருசங்கர வண்டியில் சென்ற இளைஞர் மீது அதே திசையில் வந்ந சிறீலங்கா இராணுவ வாகனம் மோதியதில் இருசக்கர வண்டியில் வந்த பொதுமகன் அதே இடத்தில் பலியாகி உள்ளார். இச் சம்பவம் இன்று (15/08/2018) மாலை இடம் பெற்றுள்ளது.
 
கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 51 வயதான க.குகனேஸ்வரன் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
 
போர் ஓய்ந்தபின்பும் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்திருக்கும் சிறீலங்கா படையினர் தங்களின் வானங்களில் வேகமாக செல்வதும் விபத்துக்களில் தமிழர்கள் பலியாவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.