• :
  • :
களத்தில்

வவுனியா தமிழ் இளைஞர்கள் மீது உபுல்தெனிய பகுதியில் இஸ்லாமிய இளைஞர் குழு தாக்குதல்!–மூவர் வைத்தியசாலையில்

வவுனியா தமிழ் இளைஞர்கள் மீது  உபுல்தெனிய பகுதியில் இஸ்லாமிய இளைஞர் குழு தாக்குதல்!–மூவர் வைத்தியசாலையில்

வவுனியா தமிழ் இளைஞர்கள் மீது  உபுல்தெனிய பகுதியில் இஸ்லாமிய இளைஞர் குழு தாக்குதல்!–மூவர் வைத்தியசாலையில்

வவுனியாவை சேர்ந்த இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் சம்பவம் ஒன்று உபுல்தெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
 
இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது,
 
வவுனியாவிலிருந்து குழாய்க்கிணறு பணிபுரியும் இளைஞர் குழு ஒன்று தம்புள்ளை பகுதியில் பணியை முடித்துக்கொண்டு மற்றுமொரு குழாய்க்கிணறு பணிக்காக காட்டகஸ்கிரிய நோக்கி நேற்றைய தினம் இரவு வேளை லொரி ஒன்றில் குழாய் கிணறு அடிக்கும் இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
 
இதன்போது உபுல்தெனிய எனும் கிராமத்தை நெருங்கிய பொழுது இவர்களின் எதிரே பயணித்த காரில் (CP-JZ 9727) வந்த இஸ்லாமிய இளைஞர் குழு ஒன்று லொரியை இடைமறித்து வாகன மின்குமிழின் ஒளியை மட்டுப்படுத்தி ஓட தெரியாத என கேட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபடவே இரு தரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதன் போது காரில் பயணித்த இளைஞன் ஒருவர் தமிழர்கள் இஸ்லாமியர்களை தாக்குகிறார்கள் என கூச்சலிடவும் குறித்த கிராமம் இஸ்லாமிய கிராமமாக இருந்தமையினாலும் அங்குகூடிய மேலும் இளைஞர்கள் தமிழ் இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்
 
இதன்போது மூன்று தமிழ் இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் கலமிதுலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
 
இது தொடர்பாக விசாரணைகளை கலமிதுலாவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றதுடன் மூவரை கைதுசெய்துள்ளதாகவும் அறியப்படுகிறது
 
அதேவேளையில் குழாய்க்கிணறு அடித்து அதன் கட்டணமாக 7இலட்சம் ரூபாய் பணம் லொரியில் இருந்ததாகவும் சம்பவத்தின் போது களவாடப்பட்டதென்றும் தமிழ் இளைஞர்கள் அணிந்திருந்த தங்க சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் முறைப்பாடு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இதேவேளை வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முன்னால் போராளி ஒருவரின் காணியில் அடாத்தாக தாவூத் ஹோட்டல் என்ற உணவகத்தை நடாத்திவரும் இஸ்லாமியர் நேற்று முன்தினம் பொலிஸாருடன் இணைந்து முன்னால் போராளிக்கும் அவரது குடும்பத்தார் மீது தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த குடும்பத்தினர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.