• :
  • :
களத்தில்

தடைகளை எதிர்த்து போராடுவேன் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணண்

தடைகளை எதிர்த்து போராடுவேன் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணண்

தடைகளை எதிர்த்து போராடுவேன் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணண்

தியாக தீபம் திலீபன் நினைவு தினத்தை தடைசெய்ய வேண்டுமென கோரி காவல்துறையினர், யாழ்.நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் அவ்வழக்கு விசாரணையின் போது தாமும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணண் தெரிவித்துள்ளார்.
 
திலீபனின் நினைவுதினம் நாளை மறுதினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அதனை தடைசெய்ய வேண்டுமென கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்போதே நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறுகையில்,
 
“தியாகி திலீபனின் நினைவு தினத்தை எதிர்த்து காவல்துறையினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக ஊடகங்களின் வாயிலாக அறிகின்றோம். பொலிஸார் செய்துள்ள அவ்விண்ணப்பம் தொடர்பில் நாமும் கவனம் செலுத்தியுள்ளோம்.
 
அந்தவகையில் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள தியாக திலீபனின் நினைவு தினத்தை ரத்து செய்தல் மற்றும் அவரின் கல்லறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிகள் அகற்றப்பட வேண்டுமென பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு எதிராகவும் யாழ்.பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
 
அதில் முக்கியமாக, திலீபன் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என்றும் அதனால் அவருக்கான நிகழ்வுகள் இரத்து செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நாமும் குறித்த வழக்கு விசாரணையின் போது முன்னிலையாகவுள்ளோம்.
 
மேலும் குறித்த செயற்பாட்டுக்கு பின்னால் செயற்படுபவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள் அதேவேளை குறித்த நிகழ்வுகளை ஒழுங்கமைப்பு செய்யும் குழு உறுப்பினர் என்ற ரீதியில் இவ்வழக்கு நடைபெறுகின்றபோது, நிகழ்வின் முக்கியத்துவத்தை நிச்சயம் எடுத்துரைப்பேன்
 
எவ்வாறாயினும் திலீபனின் நினைவுதினத்தை அனுஷ்டிப்பதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளை நாமும் முன்னெடுப்போம்.
 
தியாகி திலீபன் தனது ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக ரீதியில் அகிம்சை போராட்டம் ஒன்றையே முன்னெடுத்தார். அதனை பயங்கரவாத போராட்டமாக யாரும் குறிப்பிட முடியாது. ஒரு இனத்தின் உரிமைக்காக போராடிய உச்சகட்ட போராட்டமே அது.
 
மகாத்மா காந்தி அஹிம்சை ரீதியில் போராடி உண்ணாவிரதம் இருந்ததால் தியாகி என்று கூறுகின்றபோது திலீபனை ஏன் பயங்கரவாதியென கூற வேண்டுமென்ற கேள்வி எழுகின்றது.
 
சட்ட ரீதியாக சில விடயங்களை பார்க்கின்றபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டது. அதற்கு முன்னர்தான் திலீபனின் போராட்டம், தியாகம் மற்றும் வீர மரணம் என்பன இடம்பெற்றது. இதன்போது புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தவில்லை.
 
அதேவேளை இந்திய இராணுவத்துக்கு எதிராக நடைபெற்ற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் போராட்டத்தில் அக்காலத்தில் ஆட்சியிலிருந்த பிரேமதாச அரசாங்கம் மறைமுகமாக புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டதாக பரவலாக பேசப்படுகின்றது. ஆகையால் அதனுடன் திலீபனின் போராட்டத்தை குறிப்பிட முடியாது.
 
இதனால் எவ்வாறாயினும் திலீபனின் நினைவுதினத்தை ரத்து செய்வதற்கோ அல்லது கல்லறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிகளை அகற்றுவதற்கோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.