img/728x90.jpg
மக்கள் பணத்துக்கு ரூட்டுப்போடும் ரூட் ரவி! தமிழ் தேசிய சிதைவின் பிரதான பிதாமகனார் இவர்தான் – இவரை தெரிகிறதா?

மக்கள் பணத்துக்கு ரூட்டுப்போடும் ரூட் ரவி! தமிழ் தேசிய சிதைவின் பிரதான பிதாமகனார் இவர்தான் – இவரை தெரிகிறதா?

சுமந்திரன், மங்களசாமரவீராவின் ஆருயிர் நண்பன் நம்ம “ரூட்” ரவி அண்ணாச்சி 
பல சிக்கலில் சிக்கியிருப்பது தாயக மக்கள் பலருக்கு தெரியாது!!!

சில வருடங்களுக்கு முன்பு  பிரித்தானிய தமிழர் பேரவை(BTF ) என்ற அமைப்பை தனது குடும்பத்தின் 
பூரணகட்டுப்பாட்டில் கொண்டுவந்த அண்ணாச்சி, உட்கட்சி ஜனநாயகத்தை தூக்கி எறிந்துவிட்டு தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். GTF என்ற அமைப்பு உருவானதும் அதிலும் தனது குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆசைப்பட்டு தனது அருமை மைத்துனர் "அஞ்சாநெஞ்சன்" சுரேன் சுரேந்திரனிடம் ஒப்படைத்தார் "ரூட்" ரவி. இன்று GTF இலங்கை அரசுடன் சேர்ந்து எமது உரிமைகள் அனைத்தயும் விற்றதையும்,தமிழர் பிரச்சனை என்ற ஒன்று இல்லை,இலங்கை சிறுபான்மை மக்கள் பிரச்சனை அதாவது தமிழர்,முஸ்லீம் பிரச்சனை என்று அறிக்கை விட்டு குழப்புவதை  நீங்கள் அனைவரும் அமைதியான சாட்சிகளாக பார்க்கிறீர்கள்.

இவரின் அராஜகப்போக்கை தட்டிக்கேட்ட BTF மூத்த உறுப்பினர்கள் சுமார் 23 பேரை 
வெளியேற்றினார். அதில் தான் அண்ணாச்சிக்கு சனியன் பிடித்தது.  உண்மையாக தாயக மக்களுக்கு உழைத்த உறுப்பினர் இவரது அராஜகத்தை தட்டிக்கேட்டதன் பயனாக BTF இல் இருந்து வெளியேற்றினார் ரவி அண்ணாச்சி.

"உப்பு திண்றவன் தண்ணி குடித்தாகவேண்டும்" என்ற பழமொழிக்கு இணங்க வெளியேற்றப்பட்ட உறுப்பினரில் ஒருவர்
பிரித்தானிய சட்டத்தை நாடினார். அதன் ஒருபகுதியாக கடந்த வருடம் நீதிமன்ற வழக்காடலின் முதல்கட்ட விசாரணை தீர்ப்பில்
இவருக்கு எதிராக தீர்ந்த தீர்ப்பில் £ 10,300.00 மக்கள் பணத்தை    தண்ட ப் பணமாக செலுத்திவிட்டார் அண்ணாச்சி! ( இதில் BTF சட்டச்செலவு வேறு! எல்லாத்தையும் கூட்டிப்பாருங்கள் எவ்வளவு மக்கள் பணத்தை நாசமாக்குகிறார்கள் என்பது புரியும்) அப்பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி உங்கள் எல்லோருக்கும் மனதில் வரும். ஆம் சரியான கேள்வியே!!!

தலையில் மிளகாய் அரைப்பதட்கு  மண்ணை நேசிக்கும் எம்மவரை விட்டால் யாரிருப்பர் இந்த அய்யோக்கியர் கூட்டத்துக்கு? “ரூட்” ரவி  உடன் கையில் எடுத்த விடயம் ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிரான மனிதஉரிமை மாநாட்டில் வெல்லுகிறேன் உதவிதாருங்கள் ,  சர்வதேசநாடுகளில் இருந்து எமது பிரச்சனையை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ஜெனிவாக்கு கொண்டுவந்து இலங்கை அரசுக்கு ஆப்பு வைக்கிறேன், ஜெனீவா மனிதஉரிமை மாநாட்டில் தாம் பாதிக்கிணறு தாண்டியாச்சு, வெகுவிரைவில் மகிந்தாவை சர்வதேசப்போர்க்குற்றவிசாரணைக்கு கொண்டுவந்து நிறுத்துகிறேன்  அதன் செலவில் ஒருதுளியை பொறுப்பெடுங்கள் என்று காதில் பூச்சுத்தி அப்பாவி மக்கள் பணத்தை கறந்து அதே சமகாலத்தில் நடந்த நீதிமன்ற தீர்ப்பின் தீர்ப்புக்கிணங்க மக்களிடம் பெற்ற பணத்தை தண்டப்பணமாக கட்டிமுடித்தார்  அண்ணாச்சி ரூட் ரவி.

இன்று நீதிமன்றத்தின் அடுத்த பாகமாக எதிர்வரும் 20 மார்கழி வரும் தீர்ப்புக்கு தேவையான நிதியை பெறுவதட்கு அண்ணாச்சி போட்ட திட்டம் தான்  NORTH WEST LONDON,  ALPERTON இல் BTF ஜெனீவா மனிதஉரிமை மாநாட்டுக்கு தேவையான நிதியை பெறும் நோக்கம் என்ற போர்வையில் நடாத்தும் "FUND RISINDG"  DINNER என்ற கபட நாடக கூத்து. 

கட்சிதான் குடும்பம்,குடும்பம் தான் கட்சி என்று அயல்நாட்டில் கட்சியை அழித்தார் கருணாநிதி. அதெ அரிச்சுவட்டை பின்பற்றி இன்று BTF என்ற தேசியத்தலைவர் சிந்தனையில் உருவான அமைப்பை சின்னாபின்னப்படுத்திவிட்டார்  மக்கள் பணத்துக்கு ரூட்டுப்போடும் ரூட் ரவி!!!!!!!!!!!!!    

மக்களே விழித்தேழுவீர்களா? குட்டக்குட்ட குணிபவன் இருக்கும் வரை  குட்டுபவன் இருக்கத்தான் செய்வான். இது பழமொழி!!! தயவுசெய்து புரிந்து நடவுங்கள்.