img/728x90.jpg
மன்னாரில் மனிதப் புதைகுழியிலிருந்து இப்படுகொலை செய்யப்பட்ட 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட 276 ற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன...!

மன்னார் மனித புதை குழியிலிருந்து இது வரை 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

இந்தப் புதை குழியில் இருந்து இதுவரை 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கடந்த வாரம் அகழ்வு பணிகளில் சுமார் 2 மீற்றர் அளவில் சந்தேகத்திற்கு இடமான மனித எலும்பு மீட்கப்பட்டுள்ளது.

இது வரை அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட 276 ற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த இடம் யுத்தத்தின்போது இருதசாப்தங்களுக்கு மேலாக சிறீலங்கா இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டில் இருந்தது.

இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டும். கடத்தபபட்ட பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் பெண்கள் போன்றோர் கொடூரமான சித்திரவதைகள் மற்றும் பாலியல் சித்திரவதைகளுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்டோ உயிருடனோ இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் உள்ளது.

ஆனாலும் இப்படுகொலைகள் தொடர்பில் இதுவரை எவரும்கைது செய்யப்படவில்லை.