• :
  • :
களத்தில்

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு!

கிளிநொச்சியில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை தொடர் மழையினால்  கிளிநொச்சி இருக்கின்ற அனைத்து  குளங்களும் வான் பாய்கிறது  இதனால் கிளிநொச்சியில்   தாழ்நிலப் பகுதிகளில்  உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது இப்பொழுது மீட்ப்புப் பணிகள்  முடிவடைந்திருந்தாலும்  பெரும்பாலான இடங்களில்  வெள்ள நீர் புகுந்துள்ளது.

கிளிநொச்சி இரணைமடு குளத்தை பொறுத்தவரையில் குளத்தின் கொள்ளளவு 36 காணப்படுகின்றது இப்பொழுது  குளத்தின் நீர்மட்டம் ஏறத்தாள 39 அடி வரை காணப்படுகின்றது இன்று காலையில் இருந்து வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டாலும் இதுவரை அரை இஞ்சி   மட்டுமே குறைந்துள்ளது வெளியேறுகின்ற நீரின்  அளவும் வருகின்ற நீரின் அளவும் இதில் இதுவரை ஒரே அளவில் இருப்பதனால் நீர்மட்டத்தை குறைப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகிறது  அதனைவிட நீர்மட்டத்தை குறைந்தது 3அடி குறைக்க வேண்டிய தேவை இருக்கின்றது இன்று இரவு மழைவீழ்ச்சி இல்லாது போனால்  நீர்மட்டத்தை குறைப்பதற்கு மூன்று நாட்கள் தேவை ஆனாலும்  மழை தொடருமானால்     இரணைமடு குளத்தின் வான் கதவுகள் தொடர்ந்து பாயும் என நீர்ப்பாசனத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றது மேலும் 

பாரிய அனர்த்தங்கள் எதுவும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டாலும்   தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றர் .

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

கடந்த இரவு பெய்த பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டள்ளன.

மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க்பபட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கரைச்சி பிரதேச செயர் பிரிவில் 701 குடும்பங்களை சேர்ந்த 2550 பேர் பாதிக்கப்பட்டுளு்ளதாகவும், அதில் 7 பாதுகாப்பான அமைவிடங்களில் 229 குடும்பங்களை சேர்ந்த 858 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 629 குடும்பங்களை சேர்ந்த 2026 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7 பாதுகாப்பான அமைவிடங்களில் 341 குடும்பங்களை சேர்ந்த 1119 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 17 குடும்பங்களை சேர்ந்த 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பாதுகாப்பான அமைவிடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த சீரற்ற காலநிலையால் இரண்டு வீடுகள் முழுமையாகவும், நான்கு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.