• :
  • :
களத்தில்

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி மனித நேய ஈருருளிப் போராட்டம்!

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி மனித நேய ஈருருளிப் போராட்டம்!

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி மனித நேய ஈருருளிப் போராட்டம்! 

மாவீரர்களின்இலட்சியமும் தமிழீழ மக்களின் தியாகமும் இன்று விலைபேசி விற்கப்படும் நிலையில் தமது பூகோள அரசியல்நலன் கருதி சில வல்லரசுகள் தமிழீழவிடுதலையை தாமதிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளன. எமது விடுதலைப்போராட்டத்தின் தர்மத்தை நன்குஉணர்ந்த வல்லரசுகள் இன்று தமிழரை வைத்தே தமிழரின் விடுதலையை தாமதப்படுத்த முயற்சிக்கின்றன.

ஆனால்எமது ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் நாங்கள் நடாத்திய அறவழிப்போராட்டங்கள் எமது தமிழினப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தருவதற்கானகதவுகளைத் திறந்தன. தமிழீழ மக்களின் விடுதலைக்கான முதல் கதவு திறக்கப்பட்ட நேரத்தில்எமது விடுதலைக்கு நாம் கொடுத்த உயிர்தியாகங்களை சில சுயநல வாதிகள்தமது நலனுக்காக பேரம் பேசுவதை நாம் அனுமதிக்க முடியாது.

ஆகவே புலம்பெயர் தமிழீழ உறவுகளாகிய நாம் எமது வரலாற்றுபணியை உணர்ந்து எம் தமிழீழ மக்களையும்தேசத்தையும் காப்பாற்ற அறவழி போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இவ்வாறானபோராட்டங்களினூடகவே எமக்கு சிங்கள பேரினவாத அரசுகளினால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கேட்கவும் அதன்மூலம் எமது மக்களையும் மண்ணையும்பாதுகாக்கவும் முடியும்.

மனித உரிமைகள் ஆலோசனைஅவையின்40 ஆவது கூட்டத்தொடர்ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வேளையில்

ஐரோப்பிய ஒன்றியம்,ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகளின் தூதரகங்கள், ஐரோப்பிய பாராளுமன்றம், மாநகர சபைகள், மேல் சபைகள், பாராளுமன்றஉறுப்பினர்கள், என அனைவரிடத்திலும் தமிழினப்படுகொலைக்குஅனைத்துலக சுயாதீன விசாரணை மூலமே நீதி கிடைக்குமென வலியுறுத்திமனித நேய ஈருருளிப் பயணம்தொடங்கவுள்ளது.

18.02.2019 திங்கட்கிழமைஅன்று, பிற்பகல் 14.30மணிக்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக (Rond-Point Robert SCHUMAN, 1000 Brussels ), தமிழினத்தின்மீது சிங்கள பேரினவாத அரசுகளால் நடாத்தப்பட்ட தமிழினப்படுகொலைகளுக்கும் தற்போது திட்டமிட்டபடி தொடருகின்ற தமிழனவழிப்புக்கும் அனைத்துலக சுயாதீன விசாரணையே நீதியைப்பெற்றுத்தரும் என வலியுறுத்தி மனிதநேய ஈருருளிப் பயணம் தொடங்கவுள்ளது.

சர்வதேசத்திடம் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையைவலியுறுத்தியும், தமிழீழ மக்கள் தமது விருப்பை வெளிப்படுத்தஇலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாக்கெடுப்பினை நடாத்தவும் அவ்வாக்கெடுப்பில் புலம்யெர் தமிழீழ மக்கள் கலந்து கொள்ள ஐக்கிய நாடுகள் அவை ஆவண செய்யவும், தமிழீழ நிலப்பரப்பில் இயல்பு வாழ்க்கை உருவாக்கப்பட்டு தமிழீழ மக்களின் பேச்சு நடமாட்ட சுதந்திரகளை உறுதிப்படுத்தவும் போன்றமுக்கிய கோரிக்கைகளை முன்நிறுத்தி மனித நேய ஈருருளிப்பயணம்நடைபெறவுள்ளது. தமிழீழ மக்களுக்கு நீதிகிடைக்க இவ் அறவழிப்போராட்டத்தில் பங்கெடுக்க இருக்கும்மனித நேயச் செயற்பாட்டாளர்களை எம்முடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழீழமக்களுக்கு நீதிவேண்டியும் தமிழீழத்தைஐக்கிய நாடுகள் அவை அங்கீகரிக்கக் கோரியும்வேண்டி 04.03.2019 திங்கட்கிழைமை ஐக்கிய நாடுகள் அவையின் முன்பாக முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலிலும் அனைவரையும் கலந்துகொண்டு தங்கள் வரலாற்றுக்கடமையைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அனைத்துநாடுகளிலிருந்தும் நிகழ்விற்கானபோக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரயாணத்திற்கான முற்பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம்