img/728x90.jpg
இலங்கையில் போர்க் குற்றங்கள் நடக்கவில்லை பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய நெஸ்பி பிரபுவு - நன்றி கடிதம் அனுப்பினார் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் போர்க் குற்றங்கள் நடக்கவில்லை பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய நெஸ்பி பிரபுவு - நன்றி கடிதம் அனுப்பினார் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் போர்க் குற்றங்கள் நடக்கவில்லை என்று பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய நெஸ்பி பிரபுவுக்கு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன இரகசியமாக நன் றிக் கடிதம் அனுப்பியுள்ளார் என்று கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள் ளார்.

இறுதிப் போரில் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டது போல 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றும், இறுதிப் போரில் 7000 தொடக்கம் 8000 வரையானவர்களே கொல்லப்பட்டனர் என்றும், அவர்களில் கால்வாசிப் பேர் சாதாரண உடையில் இருந்த புலிகள் என்றும் கடந்த ஒக்டோபர் மாதம் பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய போது, நெஸ்பி பிரபு கூறியிருந்தார்.

இந்த நிலையில், அரசுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட நெஸ்பி பிர புவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் என்றும் தமிழ் பிரிவினைவாதிகளின் அழுத்தங்களால் அந் தக் கடிதம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பாக  வெளிவிவகாரச் செயலரின் இணைப்புக் கடிதத்தில், ஜனாதிபதியின்  கடிதத்தின் உள்ளடக்கம் இலங்கை  அல்லது பிரித்தானிய ஊடகங்களுக்குப் பகிரப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                                            

இனஅழிப்பு, போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியிலான அழுத்தங்கள் சிறீலங்கா நோக்கி எழுந்த போது, "மனிதாபிமானப் போரில் ஈடுபட்ட எமது இராணுவம், ஒரு கையில் ஆயுதங்களுடனும் மறு கையில் மனித உரிமைகள் சாசனத்துடனும் போரிட்டது". அதன் காரணமாக பொதுமக்கள் போரின் போது கொல்லப்படவில்லை என்ற தொனிப்பட மகிந்த ராஜபக்ச அவர்கள் மே மாதம் 2011 ல் தெரிவித்திருந்தார். ஆயினும், சர்வதேச அழுத்தங்கள் தணியவில்லை.


சர்வதேச மயப்பட்ட ஈழத் தமிழர்களின் போராட்டம், படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கான நீதிக்காகவும் பொறுப்புகூறலுக்காகவும் வலுப்பட்டு வந்த வேளையிலேயே ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டது.
இதன் பின்னர், ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் உபாயங்கள் மைத்திரி-ரணில் அரசாங்கத்தால் பிரயோகிக்கப்பட்டது. போர்க்குற்றம் தொடர்பான அழுத்தம், சர்வதேச விசாரணை, மற்றும் சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தல் போன்ற விடயங்களிலிருந்து சிறீலங்காவை காப்பாற்றியது நடப்பு அரசாங்கத்தின் பாரிய சாதனையாக சிறீலங்கா சனாதிபதி மார்தட்டிக்கொள்கிறார்.


சர்வதேசமயப்பட்ட தமிழர்களின் போராட்டத்தை முடக்குவதில் கணிசமான வெற்றியை பெற்ற இந்த அரசாங்கம், படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை சில ஆயிரங்கள் மட்டுமே என காட்டும் மற்றுமொரு நகர்வை முடுக்கிவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக கூட்டாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் வெற்றிபெறுமாக இருந்தால், இனஅழிப்பு, போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றங்களிலிருந்து நீண்ட கால நோக்கில் சிறீலங்கா அரசு விடுபடும். பொறுப்புக்கூறல் அற்றுப் போகும். இறுதியில், ஈழத்தமிழர்களுக்கான நீதி கானல் நீராக மாறும்.
ஆதலால், இந்த நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான மூலோபயத்துடன் கூடிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் தமிழர் நலனை முன்னிலைப்படுத்தும் தரப்புகள் அக்கறை செலுத்துதல் ஆரோக்கியமானது. அதன் ஒரு அங்கமாக, ஈழத் தமிழர்களின் பிரதான எதிராளிகளையும் அவர்களின் நகர்வுகளையும் விழிப்புணர்வுடன் நோக்குதல் வேண்டும்.
                                                                           ************
இறுதிப் போரின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை சில ஆயிரங்கள் மட்டுமே என காட்டும் முயற்சிக்கு சவால் விடும் வகையில் வெளிவந்துள்ள ஒரு ஆரம்பப் பதிவை கீழுள்ள இணைப்பினூடாக வாசிக்கலாம்.

https://www.srilankacampaign.org/lord-nasebys-revelations-hollow-attempt-re-write-history-deny-justice/