img/728x90.jpg
 தென் தமிழீழத்தில் பேரெழுச்சியாக ஆரம்பித்த மக்கள் போராட்டம் - தென்தமிழீழத்தின் பெரும் பகுதிகள் முடங்கியது.

தென் தமிழீழத்தில் பேரெழுச்சியாக ஆரம்பித்த மக்கள் போராட்டம் - தென்தமிழீழத்தின் பெரும் பகுதிகள் முடங்கியது.

தென் தமிழீழத்தில் பேரெழுச்சியாக ஆரம்பித்த மக்கள் போராட்டம் - தென்தமிழீழத்தின் பெரும் பகுதிகள் முடங்கியது.

காணாமல் போனவர்களின் உறவுகளால் அழைப்பு விடுக்கப்பட்ட எழுச்சிப் பேரணி இன்று ( 19/033/2019 ) காலையில் தென்தமிழீழம், மட்டக்களப்பில் பேரெழுச்சியாக ஆரம்பித்தது.கதவடைப்பு போராட்டத்தால் தென்தமிழீழம் பெரும்பாலும் முடங்கியது.காணாமல் போனவர்கள் தொடர்பாக பொறுப்புக்கூற வலியுறுத்தியும், இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், சர்வதேச தலையீடு வேண்டியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
 
மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இந்த கவன ஈர்ப்பு பேரணியில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன்,
இலங்கை தமிழரசுக் கட்சி செயலாளர் துரைராஜசிங்கம், மட்டக்களப்பு தமிழ் இளைஞர்கள் சமூக அமைப்பும் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் கலந்து கொண்டன.
 
வடகிழக்கில் உள்ள சகல பிரதேசங்களிலும் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை தாங்கியதாக பேரணி காந்தி பூங்கா வரையில் பேரணியாக சென்றனர். காந்தி பூங்காவினை பேரணி சென்றடைந்ததும் அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
போராட்டங்களை நடாத்தி வரும்போது அது தொடர்பாக கவனம் செலுத்தாத இனப்படுகொலையாளரான ஶ்ரீலங்கா ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தமது பிரச்சினையை உள்ளூர் பொறிமுறையில் தீர்க்கப்போவதாக தெரிவித்திருப்பதானது தமக்கு பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் குடும்பசங்கத்தின் தலைவி அ. அமலநாயகி தெரிவித்தார்.தமக்கான நீதியை இந்த அரசாங்கம் வழங்கும் என்ற நம்பிக்கை தங்களிடம் தற்போது சிறிதும் இல்லை எனவும் தமக்கான தீர்வினை சர்வதேசம் தலையீடு செய்வதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமது பிள்ளைகள் வாழ்ந்து வருவதாகவும் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் எவ்வாறாயினும் தமக்கு நீதி கிடைக்கும் வரையில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
 

Video