இலங்கையில் குண்டுவெடிப்புகள்  50 பலி 300 படுகாயம்.. மூன்று தேவாலயங்கள்- மூன்று நட்சத்திர விடுதிகளில் வெடிப்புகள்...!

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலங்களில் குண்டுத் தாக்குதல்... ஈஸட்ர் ஞாயிறு வழிபாட்டில் அனர்த்தம்... கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள சென். அந்தனிஸ் தேவாலயம், நீர்கொழும்பில் உள்ள சென் சபஸ்ரியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள சீயோன் தேவாலயம் ஆகியவற்றிலேயே குண்டுகள் வெடித்துள்ளன.
 
கொழும்பில் உள்ள ஜந்து நடசத்திர விடுதிகளான சங்கிரி லா, சினமன் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பெரி ஆகியவற்றிலும் குண்டுகள் வெடித்துள்ளன.
 
இதுவரை கொழும்பில் மட்டும் 24 இறந்தவர்களின் உடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இறந்தவர்களின் எண்ணிக்கை 50 இற்கு அதிகம் என்று அறியப்படுகிறது. 300 மேற்பட்ட காயமடைந்தவர்கள் வைத்திசாலைக்கு விரையப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாட்டவர்களும் அடக்கம் என மேலும் அறியப்படுகிறது...
 
குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து கொழும்பு விமான நிலையத்திற்கு பயணிகள் தவிர யாரும் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது..
 
புனித ஞாயிறு வழிபாட்டில் மக்கள் குறிவைக்கப்பட்டது உலகலாவிய அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.