img/728x90.jpg
தமிழ் இனத்தின் தேசிய விடுதலைப்போரை இழிவுபடுத்தும் BBC ஊடகத்தின் தமிழ்ப்பிரிவான BBC News தமிழ்

தமிழ் இனத்தின் தேசிய விடுதலைப்போரை இழிவுபடுத்தும் BBC ஊடகத்தின் தமிழ்ப்பிரிவான BBC News தமிழ்

தமிழ் இனத்தின் தேசிய விடுதலைப்போரை இழிவுபடுத்தும் BBC ஊடகத்தின் தமிழ்ப்பிரிவான BBC News தமிழ்

தமிழ் இனவழிப்பின் உச்சக்கட்டமாக, அந்த இனத்தின் எல்லா வேர்களையும் பிடுங்கி எறிவதற்காக சிங்கள பேரினவாதத்துடன் சேர்ந்து, இந்திய பேரினவாதமும் பல்வேறு வழிகளில் தமிழினத்தின் மீது புதிய சவால்களை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றது.

 
எமது இனத்தின் ஆணிவேராகிய, மேதகு தேசியத்தலைவர் அவர்களையும் அவரின் தலைமையிலான எமது இனத்தின் தேசிய விடுதலைப்போரையும் இழிவுபடுத்தி BBC ஊடகத்தின் தமிழ்ப்பிரிவானது தமது முகப்புத்தகத்தில் “BBC News தமிழ்” என்ற பெயரில் இயங்கும் தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
 
தமிழின அழிப்பின் 10 வருடம் நிறைவடைந்த மே 18 2019 அன்று இந்தக் காணொளியை திட்டமிட்டு வெளியிட்டிருக்கிறார்கள்.
 
தொடர்ந்து நீதி மறுக்கப்பட்ட இனமாக வாழ புலம்பெயர் தமிழர்கள் நாம் தயாரில்லை. அறவழியில் போராடிப் பெறவேண்டிய நீதிகளை அந்த வழிகளில் சென்று பெற்றிட புலம்பெயர் தமிழர்கள் தயார்நிலையில் உள்ளார்கள் என்பதை மே 18 பேரணியின் போது மக்கள் இந்தப் பிரித்தானியாவின் தலைநகரில் நிகழ்த்திக்காட்டியிருந்தார்கள்.
 
இந்திய பேரினவாத சக்திகள் தொடர்ந்து, சிங்களப் பேரினவாதத்துடன் இணைந்து தமிழினவழிப்பை நிறைவேற்ற நாம் அனுமதிக்கப்போவதில்லை.
 
‘BBC News தமிழ்’ என்ற இந்தத் தமிழ்ப்பிரிவு இந்தியப் பேரினவாதத்தால் பண உதவி பெற்று இயங்குகின்றதா என்பது இன்று எழுந்துள்ள கேள்வி. இந்தக்காணொளியில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ்க்குரல், தமிழ்நாட்டு ஊடகவியலாளர் ஒருவரினது என்பது வெளிப்படை. எனவே இந்த சங்தேகங்கள் இன்னும் வலுப்பெறுகின்றது.
 
BBC என்ற ஓர் உலகசேவை ஊடகம், தமது பிரிவுகளில் பதிவிடப்படும் அல்லது ஒளி/ஒலி பரப்பப்படும் செய்திகளை ஆராய்ந்து எந்த இனத்தையும் புண்படுத்தும் வகையில் அமையாவண்ணம் ஊடகசேவையை நிறைவேற்ற வேண்டும்.
 
எனவே பிரித்தானிய வாழ் தமிழ்மக்களே வீதிக்கு இறங்கி இக் காணொளியை வெளியிட்ட BBC ஊடகசேவைக்கு எதிராக போராட்டம் செய்ய தயாராவோம்.
 
எதற்கு இந்த ஈனப்பிழைப்பு இந்த ஊடகத்திற்கு?
 
எழுந்து, நிமிர்ந்து, எமது ஆணித்தரமான எதிர்ப்பை இந்த பிரித்தானிய ஊடகத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெரிவிப்போம்.
 
தமிழீழ விடுதலைப்போரும் தமிழீழ கனவும் என்றுமே கரைந்து போன ஒன்று அல்ல!
அது ஈழத்தமிழர் ஒவ்வொருவரினதும் உயிர் மூச்சு!
 
இவ் எதிர்ப்புப் போராட்டம் வரும் வெள்ளிக்கிழமை (24-05-2019) மதியம் 12மணி தொடக்கம் மாலை வரை, BBC ஊடகசேவையின் தலைமைச்செயலகத்திற்கு முன் நடைபெற திட்டமிடப்பட்டுக்கொண்டிருப்பதால் தயவுசெய்து அந்த நேரத்தை இவ் எழுச்சிப் போராட்டத்திற்காக ஒதுக்கி வைக்குமாறு வேண்டுகின்றோம்.
 
ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம் என்பதை மறவாமல் செயற்படுவோம்.

 
Please visit the link, email, telephone or mail the BBC TAMIL to complain about the Documentary on our Leader Hon. V.Prabaharan. 
 
இந்த இணைப்பிற்கு சென்று உங்கள் கண்டனத்தைத்தெரிவிக்கவும்.
அல்லது கீழுள்ள முகவரி, தொலைபேசி, மின்னஞ்சலுக்கு கண்டணத்தை அனுப்பி வைக்கவும். 
 
BBC Tamil Service
Bush House
The Strand
London WC2B 4PH
 
Telephone: 
+44 (0)20 -7240-3456
Fax: +44 (0)20-7497-0297
 
Alternatively you can email us at the Chennai office:
bbctamil@xlweb.com
 
https://www.bbc.com/tamil/contact.shtml