• :
  • :
களத்தில்

இராணுவத்தின் ஏற்பாட்டில் - நாக விகாராதிபதியின் உடல் யாழில் தகனம் - பொது அமைப்புகள், மக்கள் கடும் எதிர்ப்பு

இராணுவத்தின் ஏற்பாட்டில் - நாக விகாராதிபதியின் உடல் யாழில் தகனம் - பொது அமைப்புகள், மக்கள் கடும் எதிர்ப்பு

யாழ்.நாக விகாராதிபதியின் உடலை தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப் பட்ட நினைவுத் தூபி மற்றும் முனியப்பர் ஆலயத்திற்கு அருகாமை யில் அடக்கம் செய்வதற்கு பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனை தடை செய்யுமாறு யாழ்.மாநகர சபை மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் ஆகி யோருக்கு கடிதம் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவி க்கப்பட்டுள்ளதாவது, இன்று வெள்ளிக் கிழமை யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதியின் உடல் தகனம் செய்வது என்பது தமிழ் மக்க ளது உணர்வுகளைப் புண்படுத்தும் செயலா கும். அத்துடன் இந்துக்கள் மரணமடையும் உடல்களை அதற்காக ஒதுக்கப்பட்ட மயான ங்களில் தான் தகனம் செய்கின்றார்கள். 

பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் இந்து ஆலயங்களுக்கு அருகில் சடலங்களை தக னம் செய்வதில்லை. 

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில்  இந் துக்களின் புனித தலமான கோட்டை முனீஸ் வரன் கோயில் உள்ளது. அதற்கு அருகில் வைத்து விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்படுவதானது யாழ்ப்பாணத்தில் வாழும் இந்துக்களின் மனதை பெரிதும் புண் படுத்தும் செயலாகும். 

குறிப்பாக தமிழாராய்ச்சி மகாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாலயத்திற்கு அருகில் விகாராதிபதி யின் உடலை தகனம் செய்ய முற்படுவதா னது தமிழாராய்ச்சி மகாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும்  நாகவிகாரை விகாராதிபதி உடலை இவ் இடத்தில் தகனம் செய்ய முற்படுவதானது எதிர் காலத்தில் அவரது பெயரால் இவ் இடத்தில் விகாரை ஒன்றை அமைப்பதை உள்நோக் காக கொண்டே திட்டமிடப்படுகின்றது. இது எதிர்காலத்தில் இன முறுகலை ஏற்படுத்தும். 

இதேவேளை முற்றவெளி மைதானத் தில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளும் மும் முரமாக நடைபெற்று கொண்டுள்ளன. குறி த்த காணி தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் வருகின்ற போதிலும், அதற்கான அனு மதியை கொழும்பில் உள்ளவர்கள் வழங்கி யுள்ளதாக அறிய முடிகின்றது.