• :
  • :
களத்தில்

கிழக்கில் தமிழ் மக்களின் புனித இறைவழிபாட்டுத்தலங்களுக்குள் ஆக்கிரமிப்பு சிங்கள பௌத்தபேரினவாதம்

கிழக்கில் தமிழ் மக்களின் புனித இறைவழிபாட்டுத்தலங்களுக்குள் ஆக்கிரமிப்பு சிங்கள பௌத்தபேரினவாதம்

சிறீலங்கா அரசின் இனவாதம் என்பது அதன் மத அடிப்படைகளிலும் அதன் விளைவான பிற்போக்கு தனங்களிலும் இருந்து தோற்றம் பெற்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்று நான்கு வகையான மதங்கள் அந்நாட்டில் உள்ள மக்களால் பின்றபற்றப்படுகிறபோதும் பௌத்தபேரினவாத சிந்தனையை மையப்படுத்தியே அதன் அரசியலமைப்பும் ஆட்சியதிகாரமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

மதமும் அரசியலும் ஒன்றுடன் ஒன்று ஆழமாகப் பின்னப்பட்டுள்ள நாடு சிறீலங்கா. இன்று சிறீலங்காவில் உள்ள அரசியல் பிரச்சினையின் மையமே 'மகாவம்சம்' என்ற புனைவு நூல்தான். அது சிறீலங்காவை ஒரு பௌத்த நாடாக - சிங்களவர்களுக்கானதாக புனைந்துள்ளது. மற்றவர்களை வந்தேறிகள் என்கிறது. அந்த நூல் பௌத்த மதம் குறித்த புனிதத்தையும் சிங்கள மொழியின் அதிகாரம் குறித்தும் பல 'கதைகளை' அவிழ்த்துவிட்டுள்ளது. அதை தொடர்ந்து போதிப்பவர்களாக - அரசியல் அதிகாரம் அதன்வழியேதான் கட்டமைக்கப்பட வேண்டும் என்று கூறுபவர்களாக பௌத்த மத நிறுவனங்களும் அதன் பீடாதிபதிகளும் இருக்கிறார்கள். வெளிப்படையாக ஜனநாயகத்தின் வழி தோந்தெடுக்கப்பட்ட அரசு என்று கூறிக்கொண்டாலும் சிறீலங்கா அரசின் ஆட்சிஅதிகாரத்தின் திரைமறைவில் இயங்குவது இந்த சிந்தனையே.. இதைத்தான் ஆயுதப்போராட்டத்தின் வழி தமிழ் மக்களின் உரிமையைப்பெற போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 'மகாவம்ச மனநிலை' என்று குறிப்பிட்டார்.

இந்த மனநிலையில் சிங்களம் இருக்கும்வரை மற்றவர்களுக்கான தீர்வு என்பது சாத்தியமில்லை என்பதை அவர் அடிக்கடி சுட்டிகாட்டியபடியே இருந்தார். துரதிஸ்டவசமாக சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்த இந்த மனநிலை இப்போது ஒவ்வொரு சிங்கள மக்களிடமும் இடம் மாறியிருக்கிறது.

சிங்கள இடதுசாரிகள் எனக் கூறியவர்களையும் இந்த மகாவம்ச கருத்தியல் விட்டுவைக்கவில்லை.
சிங்களப் பேரினவாதம் ஒருபோதும் தமிழர்களிற்கு
தீர்வை தரப்போவதில்லை.
உலகெங்கும் வாழும் தமிழினத்தின்  ஓன்றுபட்ட போராட்ட அரசியலே விடுதலைக்கான பாதையாக இருக்கும்.

- பரணி -