img/728x90.jpg
மக்களும் அமைப்புகளும் ஊடகங்களும் பேசாமல் இருக்கப்போகிறோமா?

மக்களும் அமைப்புகளும் ஊடகங்களும் பேசாமல் இருக்கப்போகிறோமா?

ஓர் அரங்கேற்றத்துக்கு இலங்கையின் ரொறன்ரோவுக்கான துணைத்தூதர் அழைக்கப்பட்டார்.
நாம் பேசாமல் இருந்தோம்.

ரொறன்ரோவுக்கான இலங்கைத் துணைத்தூதரகத்தின் சுதந்திரநாள், தீபாவளிக் கொண்டாட்டத்துக்குச் சூடு சுரணையில்லாத சில தமிழ்ப் பிரமுகர்களும் கோவில் குருக்கள்மாரும் போனார்கள்.
நாம் பேசாமல் இருந்தோம்.

ரொறன்ரோவில் நடைபெற்ற இலங்கையின் சுதந்திரநாள் விழாவில் தமிழ்ச்சமூகத்துப் பாடகர்கள் போய்ப் பாடினார்கள்.
நாம் பேசாமல் இருந்தோம்.

இலங்கையின் சுதந்திரநாளை முன்னிட்டு ரொறன்ரோ மாநகரசபை முன்றலில் இலங்கையின் கொடியேற்றப்பட்டபோது, ஊடகர்கள் என்ற போர்வையில் சிலர் கமெராவைத் தூக்கிக்கொண்டு போய்ப் படமெடுத்து முகநூலிலும் இணையத்திலும் பகிர்ந்தனர்.
நாம் பேசாமல் இருந்தோம்.

இப்போது,
ஜனவரியில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவுக்கு இலங்கையின் அரச தொலைக்காட்சி ரூபவாஹினி வரவிருக்கிறது (பேரவை உறுதிப்படுத்திய தகவல்).
ரூபவாஹினியின் தலைவர்தானாம் முதன்மை விருந்தினர்.

தமிழர் மீதான இனவழிப்பை இருட்டிப்புச் செய்து, அழிப்பை நியாயப்படுத்தும் ஊடகமும் ஊடகத்தின் தலைவரும் அழிக்கப்பட்டவர்களின் மரபுசார் விழாவில் பங்கேற்பதைப் பார்த்துக்கொண்டு
மக்களும் அமைப்புகளும் ஊடகங்களும் பேசாமல் இருக்கப்போகிறோமா?