img/728x90.jpg
கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

கருணா ஒட்டுக்குழு உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளருக்கு ரெலோ ஒட்டுக்குழு ஆசாமி ஜனா கொலை மிரட்டல்.

கந்தக்குட்டி கோணேசலிங்கம் என்ற நபர் தன் ஊரில் கொஞ்சம் மக்கள் செல்வாக்கு ஆதரவும் உள்ளவர், அதனால் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பினார் அதன் பொருட்டு பல கட்சிகளை நாடிய போதும் அது கை கூடாத நிலையில் இதை மோப்பம் பிடித்து அறிந்து கொண்ட கருணா தன் சுயேட்சை சார்பாக போட்டிக்கு நிறுத்தியுள்ளான்.

குறித்த பகுதியில் பொது மக்களின் ஆதரவும் அபிமானமும் அந்த நபருக்கு இருப்பதால் தான் நிறுத்திய வேட்பாளர் தோல்வி அடைந்துவிடக்கூடும் என்ற அச்சத்தில் ஜனா என்ற முன்னாள் ரெலோ ரவுடி இந்நாள் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர் அந் நபரை கடத்திச் சென்று போட்டியில் இருந்து விலகுமாறும் விலகாது விட்டால் தன் பழைய முகத்தைப் காட்ட வேண்டி வரும் என்றும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளான்.

உணர்வுள்ள நேரிய மனம் கொண்ட மக்களே உங்கள் வாக்குகள் ஒட்டுக்குழுக்களுக்கும் அரச ஒத்தோடிகளுக்கும் கிடைக்காது இருக்கட்டும்,

உள்ளூர் ஊடகவியளார்களே ஊர் இனசன இளையோர்களே இவர்கள் போடும் காசுக்கும் கமராவுக்கும் கள்ளச்சாராயத்துக்கும் உங்களை அடைமானம் வைத்து இழிவு வாழ்க்கை வாழாதீர்கள்.