• :
  • :
களத்தில்

கல்லடி: டச்பார் நாவலடி  புதுமுகத்துவாரம்  ஆற்றங்கரை  பகுதியில் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

கல்லடி: டச்பார் நாவலடி  புதுமுகத்துவாரம்  ஆற்றங்கரை  பகுதியில் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின்  கல்லடி- டச்பார் நாவலடி புதுமுகத்துவாரம்  ஆற்றங்கரை  பகுதியில் இருந்து இன்று புதன்கிழமை காலை 10/01/2018 ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர் ,

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி- டச்பார் நாவலடி புதுமுகத்துவாரம்  ஆற்றங்கரை பகுதியில் இருந்து 70 வயது  மதிக்கத்தக்க  ஆண்  ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் பொலிசாரினால்  இன்று  மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர் . 

சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர் .

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி   பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிந்திரன் தலைமையிலான குழுவினரும் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

விசாரணைகளை தொடர்ந்து நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.