img/728x90.jpg
கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் இன்று 16/01/2018 : 322 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் இன்று 16/01/2018 : 322 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினர் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் கடந்த 28 ம் திகதி மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கேப்பாபுலவு பகுதியில் 111.5 ஏக்கர் காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டது.

குறித்த காணிகளுக்குள் கடந்த 1 ம் திகதி மக்கள் சென்றனர்.

இந்நிலையில் இன்னும் தமது காணிகளில் விடுவிக்க வேண்டியுள்ள 104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து இன்று(16) 322 ஆவது நாளாகவும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்

இந்நிலையில் ஆரம்பத்தில் தமது போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருமளவில் காணப்பட்டதோடு தற்போது அரசியல் வாதிகள் தம்மை கைவிட்டது போல் பொது அமைப்புக்களும் எம்மை கவனிப்பாரற்று விட்டுள்ளதாகவும் பொது அமைப்புக்கள் தமது போராட்டத்துக்கு பூரண ஆதரவை தந்து தம்மையும் சொந்த நிலத்தில் குடியமர்த்த உதவுமாறு கோருகின்றனர்.