img/728x90.jpg
சற்றுமுன் கோர விபத்து : யாழ்.புங்குடுதீவு பகுதியில் இன அழிப்பு அரசின் கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதி ஸ்தலத்தில் சிறுமி பலி

சற்றுமுன் கோர விபத்து : யாழ்.புங்குடுதீவு பகுதியில் இன அழிப்பு அரசின் கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதி ஸ்தலத்தில் சிறுமி பலி

இன்று காலை இன அழிப்பு அரசின் இராணுவ வாகனம் மோதி ஒரு சிறுமி பலியெடுக்கப்பட்டதுடன் வெற்றிகரமாக இந்த வருடத்தின் நூறாவது விபத்து பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் முப்பதாவது உயிர்ப்பலியும் எடுக்கப்பட்டிருக்கிறது..

யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதியதில், பாடசாலை மாணவியொருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

யாழ். பூங்குடிதீவு வைத்தியசாலை சந்தியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்கும் திருலங்கன் கேஷனா என்ற வயது 9 என்ற மாணவியே இவ்வாறு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
 
குறித்த மாணவி, பாடசாலைக்கு தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதன்போது, புங்குடுதீவு வைத்தியசாலை சந்தியில் கடற்படை கவச வாகனம் மாணவி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.