img/728x90.jpg
கூட்டமைப்பின் கூட்டத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு மக்கள் மீது சோதனைக் கெடுபிடி!

கூட்டமைப்பின் கூட்டத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு மக்கள் மீது சோதனைக் கெடுபிடி!

புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்திற்கு சென்ற மக்கள் தீவிர சோதனைக் கெடுபிடிக்கு உட்படுத்தப்பட்டிக்கின்றனர்.
 
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
 
புதுக்குடியிருப்பு ஐயன்கோவிலுக்கு அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெறுகின்றது.
 
இந்த நிகழ்விற்காக அழைக்கப்பட்ட மக்கள் பொலிஸாரின் தீவிர சோதனைக் கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். குழந்தைகளுடன் செல்லும் தாய்மார் முதியவர்கள் உட்பட அனைவரும் தீவிர உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
 
சொந்த மக்களை சிங்களவனுக்கு அடகுவைக்கு ஈனப்பிறவிகள் இரா. சம்மந்தன் , சுமந்திரன், சேனாதிராஜா.......
 
முள்ளிவாய்க்கால் மண் வரை சென்று உறவுகளையும் - உடமைகளையும் இழந்து சாவின் விளிம்பிற்கு சென்று மீண்டு வந்து சொல்லணா துயர்களுக்கு மத்தியில் இன்றளவும் அதே வன்னியில் முல்லை மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் உறவுகளை அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இரா. சம்மந்தன் , சுமந்திரன் போன்றவர்கள் அரசியல் பிரச்சாரத்துக்காக சென்ற நேரம் பெரியவர்கள் முதல் பெண்கள் குழந்தைகள் என அனைவரையும் பலவந்தமாக அழைத்து சிறிலங்கா காவல்துறை மூலம் பல கெடுபிடிகள்
 
இது குறித்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.