img/728x90.jpg
கொலைமிரட்டல் விடுத்த இலங்கை இராணுவத்தை சேர்ந்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லெஸ்டர் பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு கையளிப்பு

கொலைமிரட்டல் விடுத்த இலங்கை இராணுவத்தை சேர்ந்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லெஸ்டர் பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு கையளிப்பு

பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பாக போராட்டம் நடத்திய தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக லெஸ்டர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தன்று தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற, இழைக்கப்பட்ட இனப்படுகொலை, மற்றும் போர் குற்றத்திற்கு எதிராகவும், நீதி கேட்டும் அமைதியான வழியில் போராடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் மீது கொலை மிரட்டல் விடுத்த இலங்கைத் தூதரக பாதுகாப்பு அதிகாரி பிரியங்கர பெர்னாண்டோவிற்கு எதிராக புலம்பெயர் தேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 
 
அதற்கு மேலும் வலுசேர்க்கும் முகமாக லெஸ்டர் கிழக்கு பகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Keith Vaz அவர்களை தமிழர் ஒருங்கிணைப்பு குழு - லெஸ்டர் பொறுப்பாளரான மனோ மற்றும் ரனித்தா தியாகேசு சந்தித்து பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் கொலை மிரட்டலுக்கான அதாரங்களை சமர்ப்பித்ததுடன் இதற்கான நடவடிக்கையினை விரைவு படுத்துமாறு கேட்டுக்கொண்டார்கள். 
 
அதேவேளை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என்றும் இதற்காக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அரசியல் பிரிவு தொடர்ச்சியாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தனர்