• :
  • :
களத்தில்

தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி மனித நேய ஈருருளிப் பயணம் தொடருகின்றது... : நாள் 09

தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி மனித நேய ஈருருளிப் பயணம் தொடருகின்றது... : நாள் 09

தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி மனித நேய ஈருருளிப் பயணம் தொடருகின்றது... : நாள் 09

07/03./2018 அன்று ஸ்ரார்ஸ்பூர்க் மாநகரிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கான ஆலோசனை அவையின் முன்பாக தமது எட்டாவது நாள் மனித நேயப் பயணத்தை தொடங்கியிந்தனர்.
 
அங்கிருந்து 40 கிலோமீற்றர்கள் கடந்து, அல்சாசு மாநிலத்தின் இதயம் என்று வர்ணிக்கப்படுகின்ற செலசுதா நகரம் சென்றடைந்தனர். அந்நகர முதல்வர் அவர்களை வரவேற்று அவர்களின் நீண்ட பயணத்திற்கான சக்தியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறி சிற்றுண்டி, பழரசம் என்பவற்றைப் பரிமாறியிரந்தார்.
 
தமிழ் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு தம்முடைய ஆதரவினைத் தெரிவித்து, பயணத்தில் பங்குபற்றியோருக்கு அந்த நகரத்தின் வரலாறு சார்ந்த நூலைப் பரிசளித்து, அந்த நூலில்போல் தமிழ்மக்களின் வரலாறும் பதியப்படவேண்டும் என்றும் கூறி வாழ்த்தி அனுப்பிவைத்தார்.
 
அத்துடன் நகரசபை முகநூலிலும் மனித நேய ஈருருளிப் பயணத்தினைப்பற்றியும் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தின் கருத்துக்களையும் பதிவுசெய்திருந்தார். பின் தொடர்ந்தும் 30 கிலோமீற்றர்கள் கடந்து கொல்மார் என்ற இடத்தைச் சென்றடைந்தனர்.
 
அந்த மாநகர முதல்வரும் தமக்கே உரிய முறையுடன் அவர்களை உபசரித்து உடல் நலத்துடன் செனீவாவைச் சென்றடையவேண்டும் என்றும் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் முன்னெடுத்து வருகின்ற போரட்டங்கள் விரைவில் நீதியைப் பெற்றுத்தரும் என்று வாழ்த்தி அனுப்பிவைத்தார்.
 
அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளுக்கான ஆலோசனை அவையில் தமிழ்மக்களுக்கான நீதிக்காக பிரான்சு குரல் கொடுக்க வலியுறுத்தி தமது மாநகர அவை சார்பில் முறையிடுவதாக உறுதி கூறினார்.
 
நாளைய தினம் கொல்மார் மாநகரத்திலிருந்து தொடர்ந்து பயணிக்கவுள்ள ஈருருளிப்பயணம் மதியம் 13.30 க்கு முலூசு நகரைச் சென்றடையவுள்ளது. முலூசு மாநகர முதல்வரின் சந்திப்பிற்கு பின் 17.00 மணிக்கு சந் லூயி நகர அவையைக் கடந்து 18.00 மணிக்கு சுவிசு நாட்டைச் சென்றடையவுள்ளது.
 
இன்று, 08.03.2018  நடைபெறவுள்ள கவனயீர்ப்பு, சந்திப்புகளிலும் 12.03.2018 அன்று செனீவாவில் நடைபெறவுள்ள பேரெழுச்சியிலும் மக்கள் முழுமையாகக் கலந்து கொண்டு தமது வரலாற்றுக் கடமையைச் செய்யுமாறு மனித நேய ஈருருளிப் பயணத்தில் ஈடுபடுவோர் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றனர்.