• :
  • :
களத்தில்

கொள்ளையர்களினதும்,துரோகிகளினதும் கூடாரமாகமாறிவிட்டது வல்வெட்டித்துறை நகரசபை !

கொள்ளையர்களினதும்,துரோகிகளினதும் கூடாரமாகமாறிவிட்டது வல்வெட்டித்துறை நகரசபை !

கொள்ளையர்களினதும்,துரோகிகளினதும் கூடாரமாகமாறிவிட்டது வல்வெட்டித்துறை நகரசபை ! 

- வல்வையின் இளைஞர்களிடையே கடும் கோபம்;.... 
 
தேசிய உணர்வும் கல்வி மற்றும் ஆன்மீகப் பாரம்பரியமும் உள்ள வல்வெட்டித்துறையின் நகரசபைத் தலைவராக முன்னாள் கம்யூனிஸ்ற் கட்சியின் உறுப்பினரும் இந்நாள் ரெலோவின் விசுவாசியுமான திரு.கோணலிங்கம் கருணானந்தராசா ஒட்டுக்குழு ஈபிடிபி மற்றும் சிங்களபேரினவாதக் கட்சியான சிறிலங்காசுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவுடன் வல்வெட்டித்துறைநகரசபையின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
 
என்ற செய்திவல்வை மக்களிடையே கொந்தளிப்பையும் ஆத்திர்ததையும் ஏற்படுத்தியுள்ளது………தேசியத்தலைவர் மற்றும் உன்னதமான போரளிகள் பலர் பிறந்து அவர்களால் பெருமைப்படுத்தப்பட்ட மண் இன்று கொள்ளையர்களினதும்,துரோகிகளினதும் கூடாரமாகமாறிவிட்டது.
 
கடந்த நகரசபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய கோ.கருணானந்தராசா பின்னர் க.சிவாஜலிங்கம் வடமாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்பட்டபின் அடுத்த பட்டியலில் இருந்ததால் நகர சபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.
 
அவர் உறுப்பினராக இருந்தகால்ததில் நகரசபைக்குச் சொந்தமான சிற்றுண்டிச் சாலையில் ஒரு ஏழைப் பெண்ணிடம் இருந்து கப்பமாக ரூபா 275,000.00 மோசடி செய்துகையும் மெய்யுமாக ஆதாரத்துடன் பிடிபட்டு விசாரணை ஆணைக் குழுவினால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதுடன் அவரைக் கட்சியில் இருந்தும் நீக்கவேண்டும் என்றும் நகரசபையில் அவரது உறுப்புரிமை நீக்கப்படவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்ட திரு.கோ,கருணானந்தராசா வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
 
அதே போன்று நிதிமோசடிக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டுகுற்றவாளியாகக் கருதப்பட்டுநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கும் ரெலோவின் விசுவாசியான ‘கேசவன்’என்றுஅழைக்கப்படும் திரு.ஆறுமுகம் ஞானேந்திரன் என்பவர் குறைந்தவாக்குகளினால் வென்று உபதவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
 
தமிழர்களின் தலைவிதியின் காரணமாகக் கையாலாகாத் தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கும் மாவை சேனாதிராசாவின் அனுசரணையுடன், அவருடைய தமிழரசுக் கட்சியினராலேயே ஒட்டுக் குழு என்றும்,கொலைகாரர்கள் என்றும்,மண்கொள்ளையர்கள் என்றும் மேடைமேடையாகக் குற்றம் சாட்டப்பட்டு துரோகியாகத் தூற்றப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி மற்றும் தமிழர் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் மைத்திரிபால சிறிசேனாவின் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களின் ஏகோபித்தஆதரவுடன் இவர்களைப் போன்ற மோசடிக் காரர்களைத் தெரிவுசெய்ததன் மூலம்,வல்வெட்டித்துறைமண் இன்று களங்கப்படுத்தப்பட்டுள்ளது,
 
இதனால் வல்வெட்டித்துறையில் தேசிய உணர்வுள்ள மக்களிடையேயும், இளைஞர்களிடையேயும் கடும் கோபம் நிலவுகின்றதை அவதானிக்கமுடிகின்றது.
 
இந்த நான்கு கட்சிகளினதும் துரோகக் கும்பல்களின் கூட்டுஎத்தனைநாட்கள் நீடிக்கப் போகின்றதுபார்ப்போம் என்று வல்வையின் இளைஞர்கள் கொந்தளித்துக் கொண்டிருக் கின்றார்கள்.