img/728x90.jpg
அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி மட்டு சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு

அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி மட்டு சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு

அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி மட்டு சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு

அன்னை பூபதியின் நினைவு தினம் அவரின் பிள்ளைகளின் அனுமதியின்றி செய்யக்கூடாது என பூபதியின் மகள் சிறிலங்கா காவல்நிலையத்தில்  முறைப்பாடு.

தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த எமது தாயாரான அன்னை பூபதியின் 19ம் திகதி 30 ம் ஆண்டு நினைவு தினத்தையிட்டு தாயாரின் பெயரை பயன்படுத்தி நடாத்தப்படும் விளையாட்டுப் பேட்டீ மற்றும் நினைவேந்தல்களை தங்களது அனுமதியின்றி செய்யக்கூடாது நடாத்தப்படும் வியைளாட்டுப்போட்டியை நிறத்துமாறு கோரி அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி மட்டு சிறிலங்கா காவல்நிலையத்தில் நிலையததில் இன்று திங்கட்கிழமை (16) முறைப்பாடு செய்துள்ளார்

எதிர்வரும் 19 ம் திகதி அன்னை பூபதியின் 30 ம் ஆண்டு நினைவு தினமாகும் இந்த நிலையில் தேசத்தின் வேர்கள் அமைப்பு மட்டக்களப்பு வெபர்விளையாட்டு மைதானத்தல் அன்னைபூபதி வெற்றிக்கிண்ணம் கால்பந்தாட்டவிளையாட்டுப் போட்டீ நடாத்திவருகின்றது அத்துடன் 19 திகதி மட்டு நாவலடியில் அமைந்துள்ள பூபதியின் நினைவு தூபியில் நினைவு தினநிகழ்வு நடாத்த அழைப்பு விடுத்திருந்தது

இந்த நிலையில் அன்னனை பூபதியின் பிள்ளைகள் 4 பேர் உள்ளதாகவும் எமது தாயாரின் பெயரைப் பயன்படுத்தி அவரின் உறவினர்கள் என சிலர் வெளிநாடுகளில் நிதிகளை திரட்டி மோசடிகளில் ஈடுபட்டுவருவதாகவும் அத்துடன் சில அரசியல்வாதிகள் தமது தாயாரின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்துவருகின்றனர்.

எனவே எமது தாயாரான 4 பிள்ளைகளின் அனுமதியின்றி நினைவு தூபியில் நினைவு தினம். நடாத்தக்கூடாது என்பதுடன் மற்றும் நடாத்தப்பட்டுவரும் விளையாட்டுப்போட்டியை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

அன்னை பூவதியின் மகன் நடந்து முடிந்த உள்ளூராச்சிமன்ற தேர்தலில் கருணாவுக்கு அதரவளித்ததும் கருணாவின் கட்சியில் அங்கத்தவர்  என்பதும்    குறிப்பிடத்தக்கது