• :
  • :
களத்தில்

25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட 40 வீதமானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்!

 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட 40 வீதமானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்!

25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட 40 வீதமானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்!

வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டுள்ளவர்களில் 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 
நல்லிணக்க ஒருங்கிணைப்பு பொறிமுறைக்கான செயலகம் தமது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ள புள்ளிவிபரத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனடிப்படையில் தாய் தந்தை மற்றும் குடும்பத் தலைவர்கள் என 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட 40 வீதமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
 
அத்துடன் 18 – 24 வயதுக்கு இடைப்பட்ட 38 வீதமானோரும் 17 வயதுக்கு உட்பட்ட 9.8 வீதமானோரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
 
 
இதேவேளை ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்கள் நிலை என்ன என்று தெரியாமல் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர் என்று இந்த செயலகம் வெளியிட்டுள்ள புள்ளிவபர தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதுமாத்திரமன்றி இலங்கையின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 100 இற்கும் குறைவான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக நல்லிணக்க ஒருங்கிணைப்பு பொறிமுறைக்கான செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 1000 – 2000 பேருக்கு இடைப்பட்டோரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
 
கிளிநொச்சி முல்லைத்தீவு கண்டி அநுராதபுரம் மற்றும் குருநாகல் முதலான மாவட்டங்களில் 501 முதல் ஆயிரம் பேரிற்கு இடைப்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் வவுனியா பதுளை கேகாலை கொழும்பு களுத்துறை பொலனறுவை காலி மாத்தறை மற்றும் கம்பஹா முதலான மாவட்டங்களில் 251 – 500க்கு இடைப்பட்டோரும்
 
 
மாத்தளை நுவரெலியா இரத்தினபுரி மொனராகலை புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை முதலான மாவட்டங்களில் 100 – 250 இற்கும் இடைப்பட்டோரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என நல்லிணக்க ஒருங்கிணைப்பு பொறிமுறைக்கான செயலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.