• :
  • :
களத்தில்

ஆனந்தசுதாகரின் பிள்ளைகளிடம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

ஆனந்தசுதாகரின் பிள்ளைகளிடம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

ஆனந்தசுதாகரின் பிள்ளைகளிடம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

 
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பத்து வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள், தமது தந்தையை விடுதலை செய்யக் கோரி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதற்கொண்டு பல பிரமுகர்களிடம் சென்று கோரிக்கை விண்ணப்பம் கொடுத்துவந்த நிலையில்,
 
ஆனந்தசுதாகரின் பிள்ளைகளிடம் தந்தையை விடுவிப்பதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலுக்கு வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மூலம் 10 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்கி உள்ளார்.
 
சித்திரை புத்தாண்டில் அலுவலக பணிகளை சுபநேரத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வும் இரவு விருந்துபசாரமும் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
 
றெஜினோல்ட் குரே அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் அரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், சிவமோகன், யாழ் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன், வடக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்வில் அரசியல் தண்டனை கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக ஆளுநரால் 10 ஆயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.
 
அவர்களின் கல்விச் செலவிற்காக ஆளுநரின் வேண்டுகோளின் பேரில் ஏஸ்கே மீடியா நிறுவனம் (டான்) மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபா நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.