img/728x90.jpg
வடக்கு கிழக்கின் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதிகோரி மட்டக்களப்பில்  போராட்டம் !

வடக்கு கிழக்கின் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம் !

வடக்கு கிழக்கின் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதிகோரி மட்டக்களப்பில்  போராட்டம் !

சிறீலங்கா படைகளினாலும் ஒட்டுக் குழுக்களினாலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஊடக நிறுவனங்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது .

ஊடகவியலாளர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளால் கொல்லப்பட்ட  காணாமல் ஆக்கப்பட்ட  பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகேட்டு வடகிழக்கு ஊடக அமைப்புக்களின் ஒன்றிணைந்து இன்று [ 28/04/2018 ] சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வடக்கு – கிழக்கில் போர் இடம்பெற்ற சூழலில் 41 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அரச படைகளாலும் அதனோடிணைந்து செயற்பட்ட துணைப்படைகளாலும் அரங்கேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு நீதிகேட்டு மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் [ தராகி ] படுகொலை அரங்கேற்றப்பட்ட நினைவு நாளில் வடக்கு  கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடி இன்று மட்டக்களப்பில் நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.