img/728x90.jpg
நெடுந்தீவு மண் பெற்றெடுத்த வீரத்தளபதி கேணல் கண்ணன்

நெடுந்தீவு மண் பெற்றெடுத்த வீரத்தளபதி கேணல் கண்ணன்

நெடுந்தீவு மண் பெற்றெடுத்த வீரத்தளபதி கேணல் கண்ணன்


கேணல் கண்ணன் யாழ்/தீவகம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கேணல் கண்ணன்.


தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் மிகுந்த நம்பிக்கைக்கு உரிய சிறந்த போர்த்திறன் பெற்ற தளபதியாவார். மற்றும் கேணல் கண்ணன் அவர்கள் தீவகப்பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் முகாங்களையும் சிங்ககப்படைகளின் அன்றாட நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக வேவுப்புலியாக கண்ணனுடன் சில போராளிகளும் தீவகப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மிகவும் சிறப்பாக செயற்பட்ட கண்ணனின் வேவுப்புலி அணியியினர் அராளிப்பகுதிக்கு சிங்களப்படைத் கட்டளையிடும் தளபதி டென்சில் கொப்பேகடுவ வரப்போவதை அறிந்திருந்தனர்.

பின்னர் கண்ணன் அவர்களால் அராளிபகுதிக்கு கொப்பேகடுவ வரவிருக்கும் பாதையை தேர்ந்தெடுத்து மிதிவேடிகளை புதைத்தார். எதிர் பார்தபடியே அந்த பாதையால் வந்த டென்சில் கொப்பேகடுவ மிதிவெடியில் சிக்குண்டு வெடித்து சிதறினான்.

கொப்பேகடுவ இறந்ததனால் அவரது ஆலோசனையின் படி சிங்களப்படைகளால் யாழ்/நோக்கி முநேடுக்கவிருந்த பெரியதோர் இரானுவனடவடிக்கையும் தடுத்து நிறுத்தப்பட்டது.மற்றும் கொப்பேகடுவயின் தாக்குதல் திட்டமிடலில் சில போராளிகளும் வீரச்சாவினை தழுவிக்கொண்டனர் தளபதி கண்ணன் அவர்களும் இராணுவத்தின் மிதிவெடியில் சிக்கி அவரது ஒற்றைக் காலை இழந்தார். பின்னர் தலைவர் அவர்கள் கண்ணனை அளைது பாராட்டியதோடு அவர் அருகாமையில் நேரடியாக தலமை செயலகத்துக்குரிய பணிகளை வழங்கினார் கண்ணனும் கடமைகளை ஏற்று செயல்பட்டார்.இப்படியே வருடங்கள் கடந்து.

 
*****
கேணல் கண்ணன் அரசியல்துறையில் இருந்து தலைவர்களால் தளபதி கண்ணன் அவரது வேலைத் திட்டத்துக்கா தனியானதோர் முகாமினை அமைத்தார் பின்னர் யாழ்/தீவகம் பகுதிகளில் சிங்களப்படை மீது தாக்குதல் நடத்துவதற்கு இவரது அணிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது அதன்படி அவரது அணிகள் யாழ்/தீவுப்பகுதிக்குள் சிங்களப்படைகள்,ஒட்டுக்குழுக்கள் மீது ஒருசில தாத்குதல்களை நடர்தியபடி தொடர்ந்தனர்.
 
மற்றும் தளபதி கண்ணன் அவர்களால் தீவகம் வேலணை துறையூர் கடல்படை முகாமின் உயர் அதிகாரி மீது தாக்குதலுக்கான திட்டம் வகுக்கப்பட்டு புலிகளின் இராணுவ புலனாய்வின் சிறாப்புபயிர்சி வளங்கப்பட்ட ஓர் அணி மேஜர் ஈழமாறன்,மேஜர் கஜன்,உற்பட ஐந்து போராளிகள் அனுப்பப்பட்டனர் அவர்கள் சென்ற இலக்கினை சரியாக தாக்கியதோடு சிங்கள கடல்படையினர் உந்துருளி அணி மீது உக்கிரமான தாக்குதலை மேற்கொண்டார்கள் துப்பாக்கி தோட்டாக்கள் முடியும்வரை சண்டையிட்ட கஜன்,ஈழமாறன் ஏனைய போராளிகளும். இறுதி நேரத்தில் வேலணையில் உள்ள இறைவனின் சந்நினுள் புகுந்தபடி தங்களிடம் இருந்த வெடிமருந்து அங்கியை வெடிக்கச் செய்து வீரச்சாவினை தழுவிக் கொண்டார்கள்.
 
இந்த உன்னத வீரர்களீன் உயிர்த்தியாகம் கேணல் கண்ணன் அவர்களை வீறுகொண்டு எள வைத்தது.சிலமாதங்கள் கடந்தன நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்கியது போர் தொடங்கிய காலம் தொட்டு முள்ளிவாய்க்ல் வரைக்கும் கேணல் கண்ணன் களமுனையில் இரட்ணம் மாஸ்ரருடன் இணைந்து அவரது தாக்குதல் அணிகளைக் கொண்டு சிங்களப்படைகள் மீது தாக்குதல் போர்தொடுத்தார் 05.16.2009 ஐந்து மணியளவில் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் தளபதிகள் அனைவரையும் அழைத்து கலந்துரையாடல் நடந்து முடிந்ததும் தலைவர் அந்த இடத்தை விட்டு சென்று சிலவினாடிகளில் சிங்களப்படையினர் கலந்துரையாடல் நடந்த இடத்தை நோக்கி 23 mm விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் சரமாரியாக தாக்குதல் நடத்தினார்கள் அந்த இடத்தில் பிர்க்கேடியர் சொர்ணமும் நின்றிருந்தார் ஏற்கெனவே குண்டுகள் பட்டு வலது கால் சொர்ணம் அவர்களுக்கு உடைந்திருந்தது மீண்டும் அவர் நின்றிருந்த இடத்தில் குண்டு ஒன்று வீழ்ந்து அவரது மெய்பாது காவலர்ரான லெப் கேணல் மகிந்தன் சொர்ணம் அவர்கள் மேல் வீழ்ந்து அரணாக தடுத்தான் அந்த நிமிடம் வீரச்சாவினை தழுவிக் கொண்டான் பிரிக்கேடியர் சொர்ணம் அவர்களின் இரண்டாவது காலும் குண்டு பட்டு உடைத்து மறுகணமே சயினட்குப்பியை கடித்துவிட்டார்.
 
பிர்க்கேடியர் சொர்ணம் எமனுக்கும் தலை வணங்காத வீரத்தளபதி தாய்மண்ணில் சாய்ந்தான் சொர்ணம் அவர்களின் வித்துடலை விதைத்துவிட்டு வரும்வழியில் எனது பெயரைச்சொல்லி அழைத்து ஒரு குரல் திரும்பி பார்த்தேன் தொலைத்தொடர்பு கருவியில்(வோக்கி)கட்டளை வழங்கியபடி கேணல் கண்ணன் எங்க மச்ன்போராய் வாவா என்றார் எனது உற்ற நண்பன் கண்ணன் இருவரும் கதைத்ததுக் கொண்டிருந்தோம் நான் கண்ணன்ன தலைவர் சொன்னார் திருமணம் ஆனவர்களை சரணடையும்படி என்றேன் கண்ணன் சொன்னார் நான் எனது உயிர் இந்த மண்ணில் பிரியும் வரைக்கும் போர்ராடுவேன் என்று சொல்லிக் கொண்டு அவரது கைத்துப்பாக்கி தோட்டாவை எடுத்து என்னிடம் காட்டினார் இந்த தோட்டாவில் கண்ணனின் பெயர் எழுதியுள்ளது என்றார் நானும் என்னால் இயன்றவரைக்கும் அழைத்தேன் எதற்கும் இணங்கவில்லை சற்று நேரத்தில் சாள்ஸ் கண்ணன் அவர்களை தொலை தொடர்பு சாதத்தில் அழைத்தார் அவருடன் கததித்த படி அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
 
கேணல் கண்ணன் விடை பெறும் நேரத்தில் என்னை கட்டியனைத்து எனது இறுதி சந்திப்பு என்று சொன்னார் அக்கனம் எனது கண்களால் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது எதை கண்டும் கலங்காத எனது வீரத்தளபதி மக்களின் பிணக்குவியலைக் கண்டு திகைத்து நின்றான் தளபதி கண்ணன்.
 
கடமை கணியம் கட்டுபாடு என்றால் அதற்கு மறு பெயர் கண்ணன் இறுதியில் எதிரி படையிடம் பிடிபடாமல் அவரது கைத்துப்பாக்கியால் தன்னைதானே சுட்டுக் கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டான் கேணல் கண்ணன் இந்த உன்னத வீரனின் கனவுகள் நினைவாக இறுதி வரைக்கும் போராடுவோம்.
 
தீவகம் பெற்றெடுத்த வீரத்தளபதி எம்மைவிட்டு பிரிந்தாலும் அவனது நினைவுகள் என்றும் எமது நெஞ்சில் நிலைத்திருக்கும்.
 
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”